பொட்டுவின் உதவியாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு.
எல்ரிரிஈ இயக்கத்தின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உதவியாளராக செயற்பட்டு வந்த நபரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ரீ. மோகனரூபன் எனும் இந்த சந்தேக நபர் தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு திகதியை நிர்ணயிக்குமாறு அரசதரப்பு சட்டத்தரணி வேண்டியதை அடுத்து இவருக்கான விளக்க மறியல் நீடிக்கப்பட்டது.
அத்துடன் வழக்கு விசாரணையை, ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நடாத்துவதற்கு, மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
எல்ரிரிஈ அமைப்பின் புலனாய்வுத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment