சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு தங்க வாத்து- விமான நிலையத்தில் சிக்கியது
சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வருகை தந்த மாளிகாவத்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை எடுத்து வந்துள்ளார்.
இவர் மிகவும் நுணுக்கமான முறையில் தமது உடலில் இவற்றை மறைத்து வைத்திருந்ததாக, விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவரிடமிருந்து தங்க ஆபரணங்கள் உட்பட தங்க பிஸ்கட்டுகளும், இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றுள் சுமார் 2 கிலோ கிரேம் நிறையுடைய தங்க ஆபரணத்தின் பெறுமதி ஒரு கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவென, சுங்கப்பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
விமான நிலையத்தின் விசேட வாயிலிலிருந்து இந்த நபர் வெளியேறுவதற்கு முயற்சித்த போது, எழுந்த சந்தேகத்தின் பேரில், இவர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும், அதன்போதே இதனைக்கண்டு பிடித்ததாகவும் சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment