சிரியாவில் நிவாரண பொருட்கள் எடுத்து செல்ல செஞ்சிலுவை சங்கத்திற்கு தடை
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிரான கலவரம் வலுத்து வருகிறது. ஹோம்ஸ் மாவட்டத்தில் உள்ள பாபா அமர் நகரில் போராடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ராணுவம் தாக்குவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு உதவ செஞ்சிலுவை சங்கத்தினர் முன் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் பாபா அமர் நகருக்குள் நுழைய சிரியா அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக சிரியா அரசு அனுமதி அளித்தது. பின்னர் தடை விதித்ததற்கான காரணம் தெரியவில்லை என சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் ஜேகோப் கெவன்பெர்கர் கூறி உள்ளார்.
0 comments :
Post a Comment