Wednesday, March 28, 2012

சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியிலான முதல் மூன்று இடங்கள்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சையில் நாடாளாவிய ரீதியாக மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய ரீதியில் 1ஆம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி உதேஷிகா மதுஷானி ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை மாத்தளை விஞ்ஞான கல்லூரியின் அனுஷ மில்ரோய் பெர்னாட்டே பெற்றுள்ளார்.

மூன்றாம் இடத்தை இரு மாணவர்கள் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் பாரத மதுஷாங்க, றம்புக்கனை பின்னவல மஹா வித்தியாலயத்தின் தினிலி விமலரத்ன ஆகிய இருவரும் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com