அமெரிக்க வீரரின் கொலைவெறியை வன்மையாகக்கண்டிக்கிறார் பிரித்தானிய பிரதமர்
அமெரிக்க படை வீரர், ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் 17 பொது மக்கள் கொல்லப்பட்டதை, வன்மையாகக் கண்டிப்பதாக, பிரித்தானிய பிரதமர் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.
இது மனிதநேயத்திற்கு எதிரான செயற்பாடு என்றும், சட்டத்திற்கு சவால் விடுக்கக்கூடிய விதத்தில் செயற்பட்டுள்ளமை, சர்வதேச சட்டத்தை சீர்குலைக்கக்கூடிய நடவடிக்கை என்றும், லண்டனில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் வைத்துபிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாநிலத்தில், அல் கொசாய் மற்றும் நபீல் அல் கிராமங்களில், வீடுகளுக்குள் அத்துமீறி ஊடுறுவிய, அமெரிக்க ராணுவ வீரர், சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு 17 பேரை படுகொலை செய்தார்.
இவ்வாறு இவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொலை செய்யப்பட்டவர்களில், சிறு குழந்தைகள் உட்பட மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.
இதற்கு முன்னரும், அமெரிக்க துருப்பினர் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் உட்பட சமய ஆவணங்களை தீக்கிரையாக்கியதை நினைவுகூர்ந்த பிரிட்டன் பிரதமர், இவ்வாறு செயற்படுவதை, எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்க முடியாதென்றும், வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த, பிரிட்டன் பிரதமர் . சம்பவம் தொடர்பில் பக்க சார்ப்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment