குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றியடுத்து உயிரிழந்த பெணணின் மரண விசாரணை ஆரம்பம்
பொக்காவல,ரம்புக்வில பகுதியில் குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றியதை அடுத்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக வாசனைத் திரவியங்கள் மற்றும் ஓளடத அதிகார சபை, குடும்ப சுகாதார பணியகம் மற்றும் மருந்து தரப்படுத்தல் பாதுகாப்பு இராசாயன ஆய்வு நிலையம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்றை பிரதேசத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சையளித்த அனைத்து தரப்பினரிடமும் சாட்சியங்களை பதிவுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதுடன் இந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி மருந்தின் மாதிரியை இரசாயன பகுப்பாய்விற்காக ஒப்படைக்குமாறும் அக்குழுவிற்கு அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment