கடந்த ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கு மீள் நிர்மாண பணிக்கு 425 பில்லியன் செலவு
கடந்த ஐந்து வருடங்களில் அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் நிர்மாண நடவடிக்கைகளுக்காக 425 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளதுடன் 2006 ஆம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் மீள் குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், குளங்களைப் புனரமைத்தல் மற்றும் மீள் நிர்மாணப்பணிகளுக்காக பெருந்தொகை நிதியைச் செலவு செய்துள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் நிஹால் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்வேறு குளங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் பல்வேறு வீடமைப்புக் கருத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் 17,000 வீடுகள் 2009 மே மாதத்திற்குப் பின்னர் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார வசதிகள்,விதைநெல், மரக்கறிவகைகள் மற்றும் பழங்களையும் வழங்கியுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தொரிவித்துள்ளார்
வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களை மையமாகக் கொண்டு அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இந்த செயற்திட்டங்களின் கீழ் மீள் குடியேற்றம்,புனரமைப்பு மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.
0 comments :
Post a Comment