Monday, March 5, 2012

சனல் 4 இன் மற்றுமொரு வீடியோ மார்ச் 14 இல் வெளியீடு

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு தெரிவித்து வீடியோவொன்றை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி சேவை மற்றுமொரு வீடியோவை மார்ச் 14 ஆம் திகதி வெளியிடவுள்ளது .

இந்த இரண்டாவது வீடியோ Srilanka’s killing feelds : war crimes unpublished என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அரசாங்கத்திற்கும் , பாதுகாப்பு பிரிவின் உயரதிகாரிகளுக்கும் யுத்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது .

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பில் வாக்களிப்பு நடைபெறும் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த வீடீயோவை அந்த நாடுகளின் பிரதிநிதிகளிடம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com