Saturday, March 31, 2012

தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதினம்-

தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதின வைபவம் தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை 9.30அளவில் யாழ்; நகரிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுச் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் தலைவர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அனுவிக்கப்பட்டு மலராஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் பிரதேசசபை தலைவர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் தந்தை செல்வாவின் 114வது ஜனனதின நினைவுக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் உரையாற்றினர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com