Tuesday, March 13, 2012

தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 03 இல்

தேசிய கல்வி நிறுவகத்தில் கல்விமானிப் பட்டத்தை வெற்றிகராகமாக மேற்கொண்டு சித்தியடைந்த பட்டதாரிகளுக்கும் , பட்டப்பின் கல்வி டிப்ளோமாதாரிகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2004/2006 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமானி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து வெளியேறிய கல்விமானிப் பட்டதாரிகளும் , இதற்கு பின்னரான காலத்தில் பயிற்சி பெற்று சித்தியடைந்து வெளியேறிய பட்டபின் படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கும் இந்நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com