Friday, February 10, 2012

புதிர்க்கிழவனின் புதினங்கள்..

வணக்கம் வணக்கம் என்னை புதுசா ஒரு ஆள் வாறாரே என்று பார்க்கிறியளா? நான் தான் கதிரவேலு ஆனால் என்னை எல்லாருக்கும் புதிர்கிழவன் என்றால் தான் தெரியும். அந்தளவுக்கு ஊர்புதினங்கள் என்றால் பாருங்கோ எனக்கு ஒரு பெரிய புளுகம் அதனாலேயே தான் என்னமோ றோட்டில போனால் என்னட்ட கதைகேட்பதற்கு ஊர்ல இருக்கில சின்ன பெடியள் முதற்கொண்டு பெரிய ஆட்கள் வரையில் தங்கட வீட்டுக்கு என்னை கூட்டிக்கொண்டு போவாங்கள்.

இப்படித்தான் அண்டைக்கு போன கிழமை சாவச்சேரில இருக்கிற என்ற மனுஷியின்ர ஆட்களிட்ட போவம் என்று ஒருக்கா எங்கட பஸ்ஸில் ஏறி போனேன். அண்டைக்கு என்று பார்த்தா சாகச்சேரில எங்கும் ஒரே ஆமிக்காரங்கள் எங்கு பார்த்தாலும் பொலிஸ்காரர்கள் நின்று கொண்டே இருந்தினம்.

ஆனால் சனங்கள் பாருங்கோ பயமில்லாமல் திரியுதுகள் எனக்கு பாருங்கோ மனசில படாரென்று ஒரு கேள்வி, உந்த ஆமிகாரரும் பொலிஸ் காரரும் ஏன் திடிரென்று வந்திருக்கினம் என்று. சரி யாரையாவது கேட்பம் என்றால் ஒருத்தரும் தெரிந்த ஆட்கள் இல்லை.

அப்படியே நடந்து பாருங்கோ எங்கட தம்பி கடைக்கு போனேன். வழமையா கல்யாணம் கட்டின காலத்தில இருந்து அவன் கடை வைச்சிருக்கான் அப்ப வேலைக்கு போகேக்க ஒரு பிளேன்டியும் சுருட்டும் அடிக்காமல் நான் போனதில்லை. அந்த ஞாபகத்தில தான் அங்க போனான்.

அங்க பார்த்தாள் எங்கட ஊர்காரர்கள் ஒரு சிலர் உந்த உத்தயன் பேப்பர் ஜயோ எனக்கு அவங்க செய்கிற வேலையால மாறி தான் வருது ஊத்தயன் பேப்பர் இருக்கேல்லே அதையும் உந்த கண்டபடமெல்லாம் போடும் பேப்பர் தினக்குரல் பாருங்கோ அதையும் வைச்சுக்கொண்டு தங்களுக்குள்ளே குசுகுசுத்துக் கொண்டிருந்தாங்கள்.

என்னைக் கண்டதும் பாருங்கோ அவங்களுக்குள்ள உவன் கிழவன் வாறான் உவன் எங்கட வாயை கிளறாமல் விடமாட்டான் என்று சொல்லிக்கொண்டதும் காதில் விழுந்தது. சரி என்ன் நடக்க போகுது ஒருக்கா உவங்களை பிடிங்குவம் என்று கதையைக்கொடுத்தேன் அவங்க ஒருத்தரும் கதைத்த பாடில்ல அடிக்கு மேல அடி அடிச்சா அம்மியும் நகரும் தானே என்ர கதைகளைக்கேட்ட ஆட்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியல அதனாலேயே அவர்கள் மெல்ல மெல்ல சொல்ல ஆரம்பித்தனர்.

உந்த ஊத்தயன் பேப்பரில ஜனாதிபதி மகிந்த வாறாம் எண்டும் யாரோ கட்டிக்கொடுத்த சாவச்சேரி கொஸ்பிட்டல தான் கட்டிக்கொடுத்ததா பம்மாத்து செய்து தன்ர பெயரை போடுவதாகவும் செய்தி போட்டிருக்கென்று ஒரு கதையும் உந்த செக்ஸ்சு பேப்பர்ல கிளிநொச்சி வாத்தியார் உவர் சிறிதரன் இருக்கார் தானே அவர் ஒண்டுமே இல்லாத வைத்தியசாலையை ஜனாதிபதி திறக்க வாறார் என்றும் அறிக்கை விட்டிருக்காராம் என்று சொன்னாங்கள்.

உண்மையிலேயே எனக்கு பாருங்கோ நல்ல கடுப்பு வந்திட்டு ஜனாதிபதியை பற்றிக் கதைப்பதற்கு உந்த சிறி வாத்தியாருக்கும் உந்த ஊத்தயன் பேப்பருக்கும் என்ன அருகதையிருக்கு. உவன் ஊத்தயன் எம்.பி இருக்கான் பாருங்கோ உவன் யாழ்ப்பாணத்திற்கு வாற எல்லா ஆளும் கட்சி எம்;.பிகளையும் அமைச்சர்களையும் தன்ர வீட்டில அழைத்து விருந்து கொடுக்கிறதும் பின்னர் அவர்களுடன் சேர்ந்து செய்கிற வேலை எங்களுக்கு தெரியாதா?

உவன் ஜனாதிபதியின்ர நிகழ்வுக்கு தன்னை கூப்பிடல என்டதால தான் உந்த செய்தியை போடப்பண்ணிவன்; என்டது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் எனக்கு தெரியாமல் இருக்காது. முதன்நாளே தன்னைக் கூப்பிட்டால் செய்தியைப்போட வேண்டாம் என்று உந்த உவன்ர கொம்பனியில் வேலைசெய்யுற எங்கட ஊர் பெடியன் எனக்கு பிறகு அண்டைக்கு நான் கேட்கேக்க சொன்னான்.

உந்த சிறி வாத்தி இருக்கானே உவன்ர தம்பியார் குகன் என்றவன் சுவிசில இருந்து தமிழ் மக்களை தேசியம் என்று பேக்காட்டி ஒரு நெற்று நடத்தி ஏமாத்தி மரண அறிவித்தல் போட்டு காசு பிடுங்கிக்கொண்டிருக்கான். உவர் தினக்குரலுக்கு விட்ட அறிக்கையை அந்த நெற்றுக்கு போட்டிருக்கலாம் தானே பாருங்கோ.

ஆனால் அவர் செய்ய மாட்டார் ஏனென்றால் இன்னும் இஞ்ச இருக்கிற பொடி பெட்டையளை உந்த தேசியம் பேசி அவங்கட கஞ்சிலலையும் மண் அள்ளிப்போடுகின்ற வேலையை தான் செய்யுறாங்கள். ஏனேன்றால் அங்க போட்டால் உலகத்திற்கு உவங்கட வேலை பம்மாத்து என்று தெரிந்திடும் பாருங்கோ அது தான் உந்த பயம் மற்றப்படி ஒண்டுமில்லை.

உவங்கள் தங்கட சுயலாவத்திற்காக அரசாங்கம் செய்யும் வேலைதிட்டங்களை இல்லையென்று கத்தி எல்லாத்தையும் கெடுத்து இந்த யாழ்ப்பாணம் கடைசி வரை ஒண்டுமில்லாமல் இருக்க உவங்க எங்களை வைச்சு கடைசி வரை தேசியம் எண்டு பேசி தாங்களும் தங்கள் குடும்பங்களும் மாத்திரம் வெளிநாட்டிலும் கொழும்பிலும் வீடுவாங்க சொகுசு வாழ்க்கை வாழனும் என்றது தான் உவங்க எண்ணம் பாருங்கோ.

யாழ்ப்பாணத்தில சனத்திற்கு அரசாங்கம் செய்யும் வேலைகளை எப்படியாவது குழப்பி அதை பற்றி இல்லாததது பொல்லாதெல்லாம் சனத்திற்கு சொல்லி தாங்கள் ஒட்டு வேண்டனும் எண்டது தான் உவங்கட எண்ணம் பாருங்கோ உதை நீங்கள் ஒருக்காலும் மறக்க கூடாது. சரி எனக்கு நேரம் போகுது மனுஷி சீனி வாங்கிக்கொண்டு வரச்சொன்னவள் அப்ப தான் தேத்தண்ணி தருவாள் எண்டு கடையைப் பூட்டப்போறான் நான் போட்டு வாறேன் என்ன பிறகு சந்திப்போம் பாருங்கோ நான் வாறேன்.....

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com