Sunday, February 12, 2012

தொண்டாவின் பாலியல் சேட்டை மொத்த இலங்கையையும் பாதித்துள்ளது. திகாம்பரம் எம்பி

சொந்த நாட்டில் சாராயக்கடை கூடாது, இரவு விடுதி கூடாது என்று சொன்னவர் அயல்நாட்டில் சாராயம் குடித்து போட்ட ஆட்டம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்று ஊடகங்களில் வெளியான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கை தமிழ் அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டின் கோவையிலுள்ள பிரபல ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் மிகவும் கீழ்தரமாக நடந்துக்கொண்டார் என்பதே அது. இங்கு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் அடாவடித்தனங்களை மேற்கொள்ளும் அந்த தமிழ் அரசியல்வாதி தனது சேட்டைகளை கடல் கடந்தும் போய் அரங்கேற்றியிருக்கின்றார்.

கலாச்சாரத்தை பேண வேண்டியவரே போய் கலாச்சாரம் மிக்க ஓர் நாட்டில் போய் அதனை சீரழித்திருக்கிறார். இவரை முன்மாதிரியாக கொண்டு பல அரசியல்வாதிகள் இங்கு இயங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இத்தகையை ஓர் செயலை செய்யாதிருக்க வேண்டும்.

ஏற்கனவே புது வருட கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டில் ஏதோ ரகளையில் ஈடுப்பட்டு கையை உடைத்துக் கொண்டார், கட்டுநாயக்காவில் தனது ரவுடிதனத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டார். இப்போது தமிழ் நாட்டில் போய் கை வைத்திருக்கிறார்.

எம் ஜனாதிபதி பல வழிகளில் எமது நாட்டுக்கு நன்மை செய்து வருகிறார். நாடுகளுக்கிடையிலான நட்புறவை மிக அற்புதமாக வளர்த்து வருகிறார். இந்த சமயத்தில் இத்தகைய சம்பவங்களால் இருநாட்டுக்கும் இடையிலான நட்பு பாதிப்படையலாம்.

அயல்நாட்டில் எங்கள் நாட்டின் சுயகௌரவம் தாழ்த்தப்படலாம். இப்படியான அரசியல்வாதிகள் கொஞ்ம் சிந்திக்க வேண்டும். 'மக்கள் எமக்கு எத்தகைய ஓர் இடத்தினை வழங்கியிருக்கிறார்கள், நாம் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கிறோம்' என்பதையெல்லாம் மறந்து இப்படி சில்லறைத்தனமாக நடக்க கூடாது.

மலையகத்தில் சாராயக்கடை வேண்டாம். மது பாவனையை எதிர்ப்போம், இரவு விடுதிகளால் தொல்லை, அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று கோஷமெழுப்பியவர், ஊர்வலம் போனவர் எப்படி நடந்திருக்கிறார்? இதைத்தான் 'ஊருக்கு உபதேசம் என்பது'. இப்படியான இவரெல்லாம் மலையத்திற்கு பெருமை சேர்த்த அமரர் ஐயா தொண்டமானின் வாரிசு என்று சொன்னால் நம்பவா முடிகிறது...................????

சோ. ஸ்ரீதரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com