Monday, February 27, 2012

'இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை' - மஹிந்த சமரசிங்க

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று மாறு கோரும் பிரேரணைகள் எதுவும் ஐநா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

கவுன்ஸிலில் இன்று மாலை உரையாற்றியய அவர், இந்த விடயத்தில் இலங்கை இதுவரை காட்டி வருகின்ற அர்ப்பணிப்பு உணர்வை கொண்டு பார்க்கும் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் கவுன்ஸிலும் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்க்விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டவை, மிகைப்படுத்திக் கூறப்பட்ட விடயம் என்று கூறிய அவர், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணிக்க இலங்கை உரிய பொரிமுறைகளை கையாள்வதாகவும் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்கு குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com