Tuesday, February 28, 2012

மெகசீன் சிறைச்சாலை மோதல்களுடன் தொடர்புபட்ட 46 கைதிகளுக்கு விளக்கமறியலில்.

மெகசீன் சிறையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்பு என சந்தேகிக்கப் பட்டவர்கள் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி இடம்பெற்ற விசாரணைகளிலிருந்து வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோதலுடன் தொடர்புடைய மேலும் 13 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேலதிக நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க இந்த சந்தேக நபர்களிடம் விசாரணையை மேற்கொள்ள பொலிஸாருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மெகசீன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இதன்படியே 46 கைதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com