Thursday, January 19, 2012

இணையத் தளங்களுக்கான புதிய ஒழுக்கக்கோவை வெளியீடு

செய்திகளை வெளியிடும் இணையத் தளங்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியொன்றை தகவல் ஊடகத்துறை அமைச்சு தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த ஒழுக்க நெறிக்கு அமைய செய்தி இணையத்தளங்கள் செயற்படுவேண்‌டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையத்தளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ள ஒழுக்க நெறியின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை இங்கே தருகின்றோம்.

இணையத்தளங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் தாங்கள் வெளியிடும் செய்தி தகவல்கள் நூற்றுக்கு நுறு வீதம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ளும் படங்கள் மாற்றி வடிவமைக்கப்படலாகாது.

இணையத்தளத்தின் ஆசிரியர் ஒரு தவறான செய்தியை வெளியிட்டோம் என்று தெரிந்துகொண்டால் அதை திருத்தி மீண்டும் செய்தியில் சேர்த்துக்கொண்டு இதனால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

ஒரு செய்தி செய்தி தொடர்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலைப்பாட்டை இணையத்தளத்திற்கு தெரிவிப்பதற்கு நியாயபூர்வமான சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும். ஒருவரின் மதிப்பிற்கும், உணர்விற்கும், இரகசியத் தன்மைக்கும் ஏற்புடைய வகையில் இணையத்தளங்கள் நடந்து கொள்ளவேண்டும்.

சமூகப் பிரச்சினைகளை பொறுத்தமட்டில் வன்முறைகள், கலவரங்கள், போதைவஸ்து, துஷ்பிரயோகம், சித்திரவதை, மற்றவர்களை வேதனைப்படுத்தி இன்பம் காணுதல், பாலியல் ரீதியிலான தரக்குறைவான படங்களையும் தகவல்களை வெளியிடாமல் இணையத்தளங்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

குற்றச் செயல்கள், பாலியல் ரீதியிலான குற்றச் செயல்கள், சிறுவயதினர் மீதான குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் சுமத்தப்படும் வழக்குகள் ஆகியவற்றை பொறுத்தமட்டில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை குறிப்பாக 16 வயதிற்குட்பட்டவர்களின் பெயர்களை தவிர்க்க வேண்டும்.

ஒருவரின் சாதி, வர்ணம், மத, பால்நிலை அல்லது அவரின் வலதுகுறைவு தன்மைஇ மனோநிலை பாதிப்பு போன்றவற்றை இணையத்தளத்தில் அறிவிப்பதும் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தற்கொலை சம்பவங்கள் பற்றி அறிவிக்கும் போது ஒருவர் எவ்விதம் தற்கொலை செய்துகொண்டார் போன்ற சம்பவங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், அவரது இல்லம், அவரது உடல்நிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுவயதினர் தங்கள் பாடசாலை காலத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கு அநாவசியமான இடையூறுகளை ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தடைசெய்த இணை யத்தளங்கள் மற்றும் நீதி மன்றத்தின் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட இணையத்தளங்கள் தரங்குறைந்த பாலியல் உணர்வைத்தூண்டும் படங்களை பிரசுரிக்கும் இணையத்தளங்களுடன் நாம் அனுமதிக்கும் இணையத்தளங்களுக்கு எவ்வித தொடர்பும் இருக்கலாகாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com