Sunday, January 1, 2012

இன்று முதல் இலங்கையில் இணைய வீசா

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் இன்று முதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தமக்குறிய நுழைவு அனுமதியினை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கபூர் மற்றும் மாலைதீவில் இருந்து இலங்கை வருபவர்களிடம் இருந்து, எந்தவிதமாக கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலத்திரணியல் வீசா முன் அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 10 மணித்தியாலங்களில் 1252 பேர் அந்த சேவையினை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளார் சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார். 839 சுற்றுலாப் பயணிகள் இணையத்தளத்தின் ஊடாக இந்த சேவையைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குடி வரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளார் சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 413 பேரும் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இலங்கைக்கு குறுகியகால பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் இடைத்தங்கல் பயணிகள் நாட்டை வந்தடைவதற்கு முன்னர் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பயண அனுமதியைப் பெற்றுக்கொள்வது இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com