Monday, January 2, 2012

மர்மப்பொருள் வெடித்ததில் சிறுவன் பலி! மேலுமொருவர் காயம்.

அக்கரைப்பற்றில் (02.01.2012) இன்று பி.ப 03.00மணியளவில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் ஸ்தலத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் மற்றையவர் காயமடைந்தார். வெற்று வளவு ஒன்றினுள் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது பந்துபோன்ற மர்மப் பொருள் கிடந்துள்ளது அதனை எடுத்து விளையாடியவேளை மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகம்மட் அலியார் நிலாஸ் வயது 10 என்பவர் உயிரிழந்துள்ளார், ஆதம்லெவ்வை முகம்மட் இஸ்மத் வயது 16 காயமடைந்தவராவார். விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

எஸ்.எஸ்.டீன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com