Sunday, December 18, 2011

பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைக்குமாறு TNA யிடம் சொல்லுங்கள. மனோவிடம் மஹிந்தர்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை காலையில் மனோ கணேசனை அவரது பிறந்தநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த போதே ஜனாபதி இதை கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு புலிகளைபோல் செயல்படுகிறது. எனவே உங்கள் கூட்டமைப்பு நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனோ ஜனாதிபதியிடம் தனது பிறந்தநாள் விருப்பம் ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, கூறுங்கள் என்ன செய்ய வேண்டும் என ஜனாதிபதி பதில் அளித்தார்.

நீண்ட காலமாக இழுபறி பட்டுவரும் தேசிய இனப்பிரச்சினைக்கு பிறக்க போகும் புதிய வருடத்தில் நீங்கள் கட்டாயமாக தீர்வு காண வேண்டும் என்பதே என் ஒரே விருப்பம் என மனோ கணேசன் கேட்டதிற்கு பதிலாகவே ஜனாபதி இதை கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த மனோ கணேசன் நீங்கள் இன்று இந்நாட்டில் சிங்கள மக்களின் பேராதரவை பெற்ற தலைவர். இனிமேல் எதிர்காலத்திலும் எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவருக்கும் இந்த தகைமை கிடைக்கும் என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் காலத்தில் நீங்கள் ஒரு நியாயமான தீர்வை கொண்டு வந்தால் அதை தென் இலங்கை தீவிரவாதிகள் எதிர்க்க மாட்டார்கள்.

தென் இலங்கை தீவிரவாதிகள் உங்களை எதிர்க்கும் சாத்தியம் மிகவும் குறைவு. மேலும் நீங்கள் இந்நாட்டின் சிங்கள மக்களுக்கு மாத்திரம் தலைவர் அல்ல அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி என்பதாலேயே இதை சொல்கிறேன் என மனோ கணேசன் மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com