Thursday, December 15, 2011

இலங்கை உயர்கல்வியில் அவுஸ்திரேலியாவுக்கு திருப்தி. SB

மேலதிக உயர்கல்வி புலமைப் பரிசில்கட்கு வாய்புக்கள் கிடைக்கும் சாத்தியம்.

இலங்கையில் உயர்கல்வியை தொடருவோருக்கு, அவுஸ்திரேலியாவிலும் உயர்கல்வி வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலஙகைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்ற பிரதிநிதிகளை சந்தித்ததன் பின்னர், அமைச்சர் மேற்படி விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழு, எமது கல்வி நிலையங்கள் தொடர்பாக, திருப்தியடைந்துள்ளனர். எம்முடன் இணைந்து, எமது பல்கலைக்கழகங்களுடன் செயற்படுவதற்கு, அவர்கள் கூடிய ஆர்வத்துடன் உள்ளார்கள். அவுஸ்திரேலியாவுடன் எமக்கு முடியுமான அளவு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து கூடுதலான பயன்களை எமக்கு பெற்றுக்கொள்ள முடியும். இதனூடாக, எமது பல்கலைக்கழகங்களையும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் முன்னேற்றி செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளான தொழில் கட்சி மற்றும் லிபரல் கட்சியின் 5 பிரதிநிதிகள், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இப்பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று, உயர்கல்வியமைச்சில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெதி க்ளுக்மன், அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க, உயர்கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண ஆகியோரும், இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com