Sunday, December 11, 2011

சுவிற்சர்லாந்தில் இலங்கை இராணுவப் புலனாய்வாளர் இனம்காணப்பட்டார்.

அண்மைக்காலமாக புலம்பெயர் தேசத்தில் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்பவர்கள் என பலரை புலிகளின் இணையத்தளங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றது. இவ்வாறு இனங்காட்டப்படுபவர்கள் வேறு யாரும் அல்லர், புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்களே.

இரு பிரிவுகளாக பிளவுபட்டுள்ள புலிகள் தமது எதிர்தரப்பினரை இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவோர் என பல்வேறுபட்ட பின்னணிக்கதைகளுடன் குற்றஞ்சுமத்தி வருகின்றது.

அந்த வரிசையில் தற்போது இலங்கை அரசின் புலனாய்வுத்துறையின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுபவர் என இனம்காட்டப்பட்டுள்ளவர் வேறு யாருமல்லர், புலிகளுக்கான பிரச்சாரப் புயலாக அறியப்பட்ட இரா துரைரட்டணம் என்பவராவர்.

இலங்கையிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் சுவிர்சற்லாந்து சென்ற துரைரெட்ணம் அங்கு புலிகளின் மேடைகளில் தீவிர புலி ஆதரவு பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்ததுடன், தேசியத் தலைவரது பெயரை உச்சரிக்கும்போது அவரது அசடு வழியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புலிகளியக்கம் தொடர்பாகவும், அதன் தலைவர் தொடர்பாகவும் இவரால் திருவாய்மலர்தருளப்பட்டவற்றையும் அவரது எழுத்துக்களையும் தமிழ் மக்களுக்கு பொன்வாக்குகளாகவும் , அரும்பெரும் சுவடுகளாகவும் வழங்கி மக்களை ஏமாற்றி வந்த அதே இணையங்கள் தற்போது , துரைரெட்ணம் கருணாவினால் இயக்கப்படும் இலங்கைப் புலனாய்வுத்துறையை சேர்நதவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மனிதன் இணையத்தளம் இவ்வாறு தெரிவிக்கின்றது.


எச்சரிக்கை.. எச்சரிக்கை.. சுவிஸில் இலங்கை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான கைக்கூலி இரா. துரைரட்ணம்

[ Sunday, 04 December 2011, 09:22.53 PM. ]

சுவிட்சிலாந்து நாட்டிலிருந்து மக்களோடு மக்களாய் பல ஆண்டுகளாய் இரா. துரைரட்ணம் அவர்கள் ஊடுருவி இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சம்பளத்தில் சுவிட்சிலாந்தில் ஊhடகவியலாளன் என்று தன்னை மார்பு தட்டிக் கொண்டு இரா. துரைரட்ணம் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பணி புரிந்து வருகிறார் என்பது இனம் காணப்பட்டுள்ளது.

இவர் இன்று மட்டுமல்ல பல காலமாய் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இவரே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்தெடுடுப்பதில் முழுப்பங்கு வகித்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கருணா அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு இரகசிய விஜயத்தை மேற்கொண்ட போதும் பல விடயங்கள் மற்றும் மேலும் எவ்வாறான புதிய விடயங்களை அரசாங்கத்து வழங்கலாம் என்ற நோக்கில் பேசியுள்ளனர்.

மேலும் இவர் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இல்லாது ஒழிக்க பல வழிமுறைகளை இலங்கை அரசாங்கத்து வழங்கி வருகின்றார். மேலும் இவர் தமிழ் தேசியக் கூட்டமை உறுப்பினர் சிலரோடும் நெருங்கி நட்பை வளர்த்து அவர்களுடைய கருத்துக்கள் இரகசியங்களையும் அறிந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்தவண்ணம் உள்ளார்.

அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான இரா. துரைரட்ணம், இவருக்கு கொடுத்த முக்கியமான வேலையில் ஒன்றான ஜரோப்பாவிற்கு வந்திருக்கும் இனியபாரதி எவ்வாறு இங்கு செயற்பட வேண்டும் என்ன என்ன செய்யலாம் என்பதை வழி நடத்துவதே இவரின் வேலையாகவுள்ளது. முக்கியமாக தமிழ் மக்களிடையே ஊhடுவி புலம் பெயர்ந்த மக்களின் ஒற்றுமைய கலைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

ஆகவே மக்களே இப்படியான கருநாகத்தை நீங்கள் தான் என்ன செய்வது என்று தீர்மானம் எடுக்கவேண்டும்.

ஊடகம் என்பது என்ன என்று தெரியாமல் வேவு பார்க்கவே ஊடாகவியளாளன் என்று மார்பு தட்டுகின்றார்.
ஊடகப்போராளி , புத்திஜீவி, தேசியச்செயற்பாட்டாளர், இனப்பற்றாளன் என்றெல்லாம் போற்றப்பட்ட இரா துரைரெட்ணம் கருநாகம், என தெரிவிக்கப்பட்டுள்ளார். அவ்வாறாயின் துரைரெட்ணத்தின் சகாக்களான சண் தவராஜா, நிராஜ் டேவட் ஆகியோர் யாவர்? இவர்கள் தொடர்பான உண்மைகள் எப்போது வெளிவரும??????? என்ற ஆவலில் மக்கள் உள்ளனர்.

1 comments :

Anonymous ,  December 11, 2011 at 10:08 PM  

http://www.saritham.com/?p=43530

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com