Friday, December 30, 2011

ஏ.ரி.எம். இயந்திரம் ஏமாற்றுமா?

நாட்டில் இயங்கும் பிரபல்யமான தனியார் வங்கிகளில் அது வும் ஒன்று... அவ் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்கள் (ஏ.ரி.எம்.) நகர்ப் பகுதிகள் எங்கும் உள்ளன. அவ்வங்கியின் நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் வெள்ள வத்தையில் உள்ள ஏ.ரி.எம். நிலையத்துக்கு நேற்றுக் காலை (29.12.2011) எட்டு மணியளவில் எண்பதாயிரம் ரூபா பணத்தை மீளப்பெறுவதற்காகச் சென்றார். பணம் மீளப்பெறும் அட்டையை இயந்திரத்தினுள் செலுத்தினார். இரகசிய குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து, எண்பதாயிரம் ரூபாவை மீளப் பெறுவதற்காக எண்களைப் பதிவு செய்தார்.

இயந்திரம் செயல்படத் தொடங்கியது. இயந்திரத்தின் உள்ளே பணம் எண்ணப்படும் ஓசையும் கேட்டது. அவர் காத்திருந்தார். ஏமாற்றம்தான் மிஞ்சியது. பணம் வெளியே வரவில்லை.

இயந்திரத்தினுள் பணம் இல்லையென்ற முடிவுக்கு அவர் வந்தார். இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து வங்கியுடன் தொடர்பு கொள்ள முயன்றார். தொலைபேசி பழுதடைந்து பல நாட்கள் சென்று விட்டதாக ஏ. ரி. எம். காவலாளி ஓடோடி வந்து சொன்னார்.

அந்த வாடிக்கையாளர் தனது ஏ. ரி. எம். அட்டையை மீண்டும் இயந்திரத் தினுள் செலுத்தி தனது கணக்கின் மிகுதியை சரிபார்த்தார். அவருக்குப் பகீரென்றது!

எண்பதாயிரம் ரூபா மீளப்பெறப்பட்டிருப்பதாக கணக்கு மிகுதி காட்டியது. கையில் பெறப்படாத பணம் கணக்கில் கழிக்கப்பட்டிருப்பது எவ்வாறு?

ஒருவேளை எண்பதாயிரம் ரூபாவை இழக்க வேண்டியேற்படுமோவென வாடிக்கையாளர் கலங்கிப் போனார். வெள்ளவத்தையில் உள்ள வங்கிக் கிளைக்கு சிறிது நேரத்தில் ஓடோடிச் சென்று விஷயத்தை அறிவித்தார். நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து கடிதமொன்றும் வாங்கிக் கொண்டனர்.

இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வாடிக்கையாளரின் எண்பதாயிரம் ரூபா பணம் மீண்டும் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

தொழில்நுட்பம் உச்சத்துக்கு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் வாடிக்கையாளர்களை மனப்பதற்றத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் தலைசிறந்த நிதிநிறுவனமென விளம்பரப்படுத்தும் பிரபல்யமான இவ்வங்கிகள் நடந்து கொள்ளலாமா என்கிறார் அவ்வாடிக்கையாளர்.

நன்றி தினகரன்

1 comments :

Naleem ,  December 30, 2011 at 5:07 AM  

its happening everywhere....im in UAE working in a bank, and some time i hear one of the largest UAE government banks ATM machines also malfunctioning as you said, and after customer lodge an complain to the banks tollfree, they will take around 1 month to rectify the problem and reverse the money to the custyomer account....

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com