Thursday, December 15, 2011

நீர்கொழும்பு மாநகர சபையின் கூரை இடிந்து வீழுந்தது - நால்வர் காயம், பொருட்களுக்கு சேதம்

நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதான கட்டிடத்தின் ஒரு பகுதியின் கூரை உடைந்து விழுந்தது . இதன் காரணமாக நான்கு ஊழியர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன் பொருட்கள் சிலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் விநியோகம் மற்றும் சம்பளம் வழங்கும் பகுதி அமைந்துள்ள கட்டிடத்தின் கூரையே முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது . நீர்கொழம்பு மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவினர் சம்பவ இடத்துக்கு வந்து உடைந்த கூரைப்பகுதியை அகற்றியதுடன், அங்கிருந்த ஆவணங்கள் ,கணனிகள் மற்றும் அலுவலக பொருட்களையும் பாதுகாப்பாக அகற்றினர் .இதற்கு மாநகர சபை ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

மேற்படி கட்டிடத்தின் கூரைப்பகுதி நீண்டகாலமாகவே சேதமடைந்திருந்த நிலையில் இருந்ததாகவும், இன்று காலை திடீரென்று கூரை இடிந்து விழுந்ததாகவும் மாநகர சபையின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை. இன்று முற்பகல் மாநகர சபை மேயர் அன்ரனி ஜயவீர இது தொடர்பாக விசேட கூட்டமொன்றை மாநகர சபை உறுப்பினர்களுடன் நடத்தினார்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com