Thursday, December 15, 2011

லிபியா அதிபர் கடாபி கொலை: சர்வதேச கோர்ட்டில் மகள் வழக்கு

லிபியா அதிபர் கடாபி, அவரது மகன் டோட்டசிம் ஆகியோரை அங்குள்ள புரட்சிப் படையினர் கடந்த அக்டோபர் மாதம் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடாபியின் மகள் ஆயிஷா, தனது தந்தை மற்றும் சகோதரர் கொலை பற்றி முறையாக விசாரணை நடத்த கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆயிஷா சார்பில் அவரது வக்கீல் நிக்காப்மேன் சர்வதேச கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், “கடாபியும், அவரது மகனும் கொலை செய்யப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. இதுபற்றி சர்வதேச கோர்ட்டு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். கடாபி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.

இதைப் பார்த்து கடாபியின் குடும்பத்தினர் அனைவரும் பெரும் வேதனைக்குள்ளானோம். இறந்த பிறகு கடாபியின் உடலை புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் அவமதித்ததையும் டி.வி.யில் ஒளிபரப்பினர். இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லிபியாவில் ராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் கடாபி மகள் ஆயிஷா அவரது சகோதரர்கள் முகமது, ஹரிபால், தாயார் சபியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி அங்கேயே தங்கி உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com