Monday, December 5, 2011

திருந்தவே மாட்டார்களா? சுவிஸ் பெண்ணின் ஆதங்கம்.

கடந்த 27 ம் திகதி புலிகளின் மாவீரர் தின கொண்டாட்டங்கள் பல்வேறு குத்து வெட்டுக்களுக்கு மத்தியில் ஒருவாறாக நிறைவுற்றது. மாவீரர் தினத்தின் பெயரால் கோடிக்கணக்கான பணம் அறவிடப்பட்டது. இப்பண வசூலிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களின்போது, மாவீரர்தின முடிவில் மக்களிடம் அறவிடப்படும் பணத்திற்கான வரவு-செலவு கணக்கு காட்டப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை எந்த தரப்பிடமிருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது , என்ன செலவானது, பெற்றுக்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான பணம் எவரெவரது பக்கட்டுக்களை நிரப்பியுள்ளது என்ற எவ்வித தகவலும் இதுவரை இல்லை.

இதில் மிகவும் வேதனைக்குரிய விடயம் யாதெனில் , மாவீரர் தின வசூலிப்புக்கள் சில இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது ஒரு வியப்பான விடயமாக இருக்கலாம் ஆனால் உண்மை. குறிப்பிட்ட நிகழ்வுக்காக பண வசூலிப்பில் இறங்கியிருந்த புலிகளின் உண்டியல் காரர்கள், தமிழ் மக்கள் ஒன்று கூடும் இடங்கள், சடங்குகள் இடம்பெறும் இடங்கள் , பஸ் தரிப்பு நிலையங்கள், தமிழ் கடைகள் என எவற்றையும் விட்டு வைக்கவில்லை. இவற்றின் வாசல்களில் சிறிய பைல் ஒன்றுடன் நின்று மக்களிடம் பைலை நீட்டுவார்கள். இவ்வாறு பகிரங்க இடத்தில் நின்று பயிலை நீட்டும்போது, சிலர் வில்கண்டத்தை ஏன் வலிகைல்கு வாங்குவான் மூதேசிகளுக்கு பிச்சையை கொடுத்துவிட்டு விலகிப்போவோம் என உடனே கிடக்கிறத்தை கொடுத்துவிட்டுச் செல்வர், சிலர் பெருமைக்காக தன்னிடம் இல்லாவிட்டாலும் ஒரு தொகையை எழுதுவர்.

இவ்வாறு தொகை எழுதியவர்களின் வீடுகளை சுவிலிலுள்ள புலிகள் தொடர்ந்தும் தட்டிவருகின்றனர். இது தொடர்பாக சுவிஸ் பெண்மணி ஒருவர் தகவல் தருகையில், எனது கணவரை பஸ்தரிப்பு நிலையம் ஒன்றில் சந்தித்த சிறி எப்படுகின்ற புலி பணம் கேட்டார். பணம் கணவரிடம் இல்லாததால் 100 பிராங்குகள் தருவதாக எழுதிவிட்டு வந்தார். பின்னர் அவன் இரு தடவைகள் வீட்டுக்குவந்தான். கணவர் நான் இல்லை என்று சொல் என்றார். நானும் அவ்வாறே செய்தேன். அதேநேரம் எனது கணவனிடம் கேட்டேன் எழுதிப்போட்டு ஏன் இப்படி செய்கின்றாய் என. இந்த சிரங்கு பஸ்நிலையத்தில் ஆட்களுடன் நின்று கொப்பியை நீட்டியது, நூறு ரூபாயை எழுது என்று விட்டுவந்தேன். மாவீரர் தினம் என்ற இந்த நாடகம் முடிந்தால் வரமாட்டான் என்றார். ஆனால் இந்த சிரங்கு மாவீரர் தினம் முடிந்தபிறகும் வருகுது. இவனுகளுக்கு உழைத்து தின்றத்துக்கு மனம் வருகுதில்லை. எங்கையாவது தெண்டுறத்துக்குத்தான் திரிகிறானுகள். சுவைகண்ட ஆட்களெல்லோ எங்க திருந்தப்போறானுகள், என்றார் அந்தப்பெண்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com