Saturday, December 24, 2011

வடகிழக்கில் தமிழே அரச கரும மொழி எனும் சம்பந்தன் ஆயருக்கு ஆங்கிலத்தில் கடித்தம்.

ஊருக்கு உபதேசம் உனக்கில்லயடி கண்மணி! எனும் விதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் கையொப்பமிட்டு அக்கூட்டமைப்பின் மீதான தமது விமர்சனத்துடன் கூடிய நிபந்தனைகளை முன்வைத்திருந்தனர்.

வடகிழக்கில் தமிழ் மொழிலேயே கருமமாற்றப்படவேண்டும் எனவும் அதற்கான உத்தரவாதத்ததை இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பில் மாத்திரமல்ல நடைமுறையிலும் வழங்கவேண்டுமென கூக்குரல் இடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு , புத்தி ஜீவிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப்புக்கு விலாசமிடப்பட்டுள்ள குறிப்பிட்ட கடிதத்தில் , சமூக ஆர்வலர்கள் என சிலரால் எழுதப்பட்ட கடிதத்திற்கு ஊடகங்கள் பெரும் பிரபல்யத்தை வழங்கியமையால், நான் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இக்கடித்தத்தை வரைகின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவில் சமூகம் என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள பிரதியில் எவரும் கையெழுத்திடவில்லை என்பதை கவனத்திற்கு கொண்டுவரும் அதேநேரத்தில் தங்களின் பெயர் முதன்மையாக இருந்தபடியினால் இப்பதிலை தங்களுக்கு எழுத தீர்மானித்தேன்.

தமிழ் மக்களின் ஒரு சில பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாங்களும் இன்னும் சிலரும் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக இக்கடிதத்தை எழுதுகிறேன். அதிக வேலைப்பலுவின் நிமித்தம் பதில் எழுதுவதில் ஏற்பட்ட தாமதிற்காக வருந்துகிறேன்.

அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இடம்பெறும் எல்லா விடயங்களையும் பொதுமக்களிற்கு வெளியிடுவது சாத்தியமற்றதாகும்.

எனினும் ஏற்றுக்கொள்ள கூடியதும் நடைமுறை சாத்தியமானதும் நிலையானதும் பெரும்பான்மையான எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடியதுமான அரசியல் தீர்வை நோக்கியதாக எமது பேச்சுவார்த்தை கட்டமைக்கப்பட்டுள்ளது.

தங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் குறித்து தங்களோடும் ஏனையவர்களோடும் கலந்துரையாடுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் தொடர்பாக மறைமாவட்ட ஆயரிடம் ஊடகம் ஒன்று கேட்டபோது இதுவரை எந்த பதிலும் தமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வரவில்லை என அவர் தெரிவித்துள்ளர்.

குறிப்பிட்ட விமர்சனமும், நிபந்தனைகளும் ஊடகங்களின் முக்கிய இடம்பிடித்திருந்ததை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலை யில் இதுவம் கூட்டமைப்பின் ஊடகங்களுக்கான அறிக்கையா என கேட்கப்படுகின்றது.

கடிதம் வருமாறு

R. Sampanthan 2D Summit Flats
ParliamentaryGroup Leader KepetipolaMawatha
Tamil National Alliance Colombo 05

23rd December 2011

To: Rt. Rev. Dr. Rayappu Joseph
Roman Chatholic Bishop of Mannar
Bishop’s House
Mannar

Dear Rev. Sir,

I am in receipt of the letter sent by you and some others to the notice of the members of Parliament of the Tamil National Alliance, certain issues pertaining to the Tamil people. We have been busy with several matters and I regret the delay in responding.

The copy of the letter received by me has not been signed by anyone, though the names of several persons have been referred to as purported signatories. Nevertheless, I have decided to send you a response, as you are the first of several persons referred to as senders. I observe that the said letter has also received publicity in the media. Hence, I will release this response to the media.

It is not always possible to release to the public, all matters that take place in our talks with the Government. Our talks are however so structured to ensure that any political solution will be reasonable, workable and durable, and that it will conform to the aspirations of the majority of our people.

We are prepared to meet and discuss with you and others all matters raised in the aforesaid letter. Arrangements for such a meeting can be finalized on hearing from you.

With my respectful regards,

Yours sincerely,

R. Sampanthan

Member of Parliament
Group Leader
Tamil National Alliance


2 comments :

Anonymous ,  December 24, 2011 at 6:21 PM  

Friend, language is not an issue at all. Next time, please write some thing useful, without wasting others time.Do not proof again and again that our enimy can easily use us against our own people-good example is duglus, pillian, karuna-this is called devide and rule-using us to kill us.

Anonymous ,  December 24, 2011 at 7:45 PM  

We believe this is very common in political trade.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com