Monday, December 5, 2011

இலங்கையர் ஒருவருக்கு முதற்தடவையாக மகாத்மா காந்தி விருது. பிரதமர் புகழாரம்.

சமாதானம் மற்றும் சக வாழ்வினால் பிணைக்கப்பட்ட பேதங்களற்ற சமூகமொன்றை உருவாக்குவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும். முதல் தடவையாக இலங்கையில் ஒருவர் மகாத்மா காந்தி விருதினை பெற்றிருப்பது அந்த இலக்கில் வெற்றி கொண்ட ஒரு நிகழ்வாகுமென பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

சமய, இன, அரசியல் உட்பட அனைத்து பேதங்களை மறந்து அனைத்து மக்களும் மகிழ்ச்சியடையும் விதத்தில் எமக்கு இந்த விருது கிடைத்துள்ளது. முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் சேவைகளை முழு உலகமும் அங்கிகரித்துள்ளது. உலகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட ஒருவருக்கே மகாத்மா காந்தி பட்டம் வழங்கப்படும். எனவே இலங்கை அது போன்ற மாபெரும் மனிதர்கள் வாழும் நாடு என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு நாம் அனைவரும் மகிழச்சியடையலாம். இது இலங்கைக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே இலங்கையர்கள் என்ற சமூகத்தை கட்டியெழுப்புவதே மஹிந்த சிந்தனையின் நோக்கமாகும்.

மகாத்மா காந்தி விருது பெற்ற சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தை வரவேற்கும் முகமாக கேகாலை நகர சபையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, அமைச்சர் கலாநிதி ஜகத் பாலசூரிய, பிரதி அமைச்சர்களான லலித் திசாநாயக்க, எச்.ஆர்.மித்ரபால, பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், மாகாண ஆளுநர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com