Thursday, December 8, 2011

ஐ.தே.க தலைவர் பதவிக்கு கருவைவிட தகுதி வாய்ந்தவன் நான் தான் என்கிறார் ஜோன் அமரதுங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க கரு ஜயசூரியவைவிட தனக்கு தகுதி அதிகம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி பிரதம கொரடாவுமாகிய ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வரப் போவதில்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

தலைவர் பதவியை ஏற்கும் தகுதியுடைய தன்னைவிட மூத்தவர்கள் கட்சியில் இருப்பதால் தான் போட்டியிட முன்வரவில்லை எனவும் , நேற்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கட்சி செயற் குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கரு ஜயசூரிய கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளார் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.

ஆனால் கட்சியை விட்டு விலகி கரு ஜயசூரிய மீண்டும் கட்சியில் இணைந்தது போல் தான் கட்சியில் இருந்து மீண்டும் விலக மாட்டேன் எனவும், தலைமைத்துவத்துக்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன் எனவும் மகாத்மா அரசியல் செய்யவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அவ்வாறு உறுதிமொழி அளித்துள்ள கரு ஜயசூரிய இன்று கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளமை ஒழுக்கமான செயலாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என ஜோன் அமரதுங்க இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளதாவது ,

கரு ஜயசூரிய எமது கட்சியிலிருந்து விலகி உறுப்பினர்கள் பலருடன் சென்று மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார். இதன்போது அவருக்கு அமைச்சர் பதவி ஒன்றும் கிடைத்தது.இன்னும் சிலருக்கும் பதவிகள் கிடைத்தன.

கட்சியிலிருந்து பிரிந்து பல பேருடன் அவர் சென்ற போது,கட்சி பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி வந்தது. பின்னர் அரசாங்கத்துடன் உறவை முறித்துக் கொண்டு வந்து அவர் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதன் போது அவர் கட்சியிலிருந்து விலகி இனி ஒருபோதும் செல்லமாட்டேன் என்றும், கட்சித் தலைமைத்துவத்திற்கு ஒருபோதும் சவால்விடுக்க மாட்டேன் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com