Monday, December 26, 2011

நாடுபூராகவும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. படங்கள் இணைப்பு

சுனாமி அனர்த்தம் நடைபெற்று ஏழாண்டு பூர்த்தி நிகழ்வு இன்று வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் நடந்து முடிந்தது. வேதனை நிறைந்த மனநிலையோடு சோகமே உருவாக பலர் அழுது புலம்பி தங்கள் மனக்கிடக்கைகளை வேதனையோடு வெளிக்காட்டியதை அவதானிக்க முடிந்தது.வேதனை சுமந்த சோகங்களோடு சுனாமியில் உயிரிழந்த உறவுகளின் இழப்பை ஈடுசெய்ய முடியாத நிலையிலேயே நாட்கள் நகர்கின்றன.சுனாமியில் நானும் முற்றாகப்பாதிகக்ப்பட்டு உடமைகளை இழந்தவன் என்ற வகையில் இந்த இழப்புக்களின் வலி எவ்வளவு பாரதூரமானது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட கோர சுனாமியின் கொடூர தாண்டவம் இன்றுவரை வியாதிப்பித்திருப்பது வாழ்க்கையில் யாருமே மறக்கமுடியாத நிகழ்வாகும்.இந்த இழப்புகளின் நினைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டு உணர்வுகளின் உயிர்ப்பிப்பு மீள் பிறப்பானதாகவே அமைந்திருந்தது. இன்றைய நாளை அரசு தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி அதன் பிரதான நிகழ்வு காத்தான்குடியில் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரவீர தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம மந்திரி தி.மு ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுனர்,மற்றும் அமைச்சர்கள்,மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்வுகளுக்கப்பால் மனதை உருக்கும் நிகழ்வொன்று கல்முனை பிரதேச செயலக தமிழ் பிரிவில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமயத் தலைவர்கள்,இராணுவ அதிகாரிகள்,உறவுகளை இழந்த உறவுகள் ஒன்று கூடினர்.

கடற்கரை அண்டிய பிரதேசத்தில் சுனாமிக்கு முன் அமைந்திருந்த மாமாங்க வித்தியாலயம் சுனாமி அனர்த்தத்தில் முற்றாக அள்ளுண்டு போனது அப் பாடசாலையில் கற்ற 65 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இப்பிரதேசத்திலுமுள்ளவர்களாக 574 பேர் உயிரிழந்தனர். இந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நினைவு தூவி அமைக்கப்பட்டிருக்கிறது அதில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது இந்த நினைவு தூபியில் உறவை இழந்த உறவுகள் தீபமேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.பலர் கதறி அழுது தங்கள் மனப்பாரத்தை வெளிக்காட்டியது எனக்கும் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

பலர் தங்கள் பிள்ளைகளையும் ,சிலர் தங்கள் பெற்றோரையும், சிலர் கணவன்மாரையும் இழந்திருக்கின்றனர் இந்த இழப்புக்களை யாராலும் ஈடு செய்ய முடியாது வீடு கட்டிக்கொடுக்கலாம் உடமைகளை மீட்டிக்கொடுக்கலாம் உறவுகளை யாரும் மீட்டிக்கொடுக்க முடியாது.

இதேவேளை கல்முனை பிரதேசத்தில் மருதமுனை,கல்முனை,சாய்ந்தமருது போன்ற கிராமங்களில் இதுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தகரக்கொட்டில்களிலும், குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுனாமிக்கு பின்னரான மறுவாழ்வு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதே வேதனைக்குரிய விடயமாகும். சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இறைவனிடம் பிரார்த்திப்பதோடு இன்னுமொரு சுனாமி அனர்த்தம் வராமலிருக்க இறைவனிடம் இருகரமேந்திபிரார்த்திப்போம்.






இதேவேளை கல்முனையில் அமைந்துள்ள ரோஸ் சரிட்டீஸ் நிறுவனத்தினர், தமது காரியாலயத்தில் 2004 டிசம்பர் நடந்தேறிய சுனாமியில் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டிருக்கும் கல்லின் முன்பதாக அஞ்சலியொன்றை மேற்கொண்டனர். இதன்போது, சுனாமியில் உயிர்நீத்த சகலரும் நினைவுகூரப்பட்டனர். நிறுவனத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ந.பரசுராமன், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ச.ராஜீஷன் உட்பட சகல உத்தியோகத்த்ர்களும் கலந்துகொண்டன பரிசுகளை அதிதிகள் வழங்கபிவைப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.




மேலும் குருநாகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திருமதி குசும் ஹெட்டிகே தலைமையில் சுனாமி அனர்த்தத்தை நினைவு கூறும் விசேட நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மேலதிக செயலாளர் எச். எம். திலக பண்டார உட்பட பலர் கலந்து கொண்டனர்.






.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com