Monday, December 5, 2011

அமெரிக்க உளவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரான்

ஈரானில் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவத்தின் விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட மறுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரானில் உள்ள இங்கிலாந்து தூததை வெளியேற்ற பாராளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது.

இந்நிலையில் ஈரானின் வடக்குப்பகுதியில் உள்ள ராணுவத்தின் விமான தளத்தினை அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானமான ஆர்.கியூ.-170 என்ற விமானம் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாகவும், உஷாரான ஈரான் விமானப்படையினர் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக , அந்நாட்டு அராபிக் அல்-அலாம் என்ற டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரில் உள்ள அணுதிட்ட நிலைகளை வேவு பார்த்ததாக அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com