Tuesday, December 6, 2011

பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம் இன்று

அடுத்த வருடத்திற்கான பாடப் புத்தகங்களை விநியோகிப்பதற்கான தேசிய வைபவம் இன்று முற்பகல் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் கண்டி பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெற்றது. கண்டி மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்காக இந்தப் பாடப் புத்தகங்கள் இன்று கையளிக்கப்பட்டன.

சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு 37 மில்லியன் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இதேவேளை, இன்றைய தினம் சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இலவச பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர சுற்றுநிருபம் மூலம் மாகாண கல்வி அமைச்சினூடாக அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

தேசிய கீதம், இலவச பாடப் புத்தகம் தொடர்பான கீதம் பாடுதல்,அதிபர் உரை, பாடப் புத்தகத்தை நல்ல முறையில் பாவிப்பது மற்றும் மீண்டும் பாவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பான நோக்கம் பற்றிய உரை, பாடப் புத்தகத்தை நல்ல முறையில் பாவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், வகுப்பறை மட்டத்தில் புத்தக விநியோகம் என்பன உள்ளடங்கிய நிகழ்ச்சி நிரலும் அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்வு இடம்பெறுவதை படங்களில் காணலாம்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com