Thursday, December 1, 2011

தமிழ் சிறை கைதிகள் மாவீரர் தின நிகழ்வை ஏற்பாடுகளை செய்திருந்தனர் - அமைச்சர் கெஹலிய

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளின் அறைகளை சோதனை செய்தபோது, அங்கு அவர்கள் மாவீரர் தின நிகழ்வை அனுஸ்டிக்க ஏற்பாடுகளை செய்திருந்தமை தெரியவந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம் பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிகள் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தையும் துப்பாக்கி ஏந்திய புலிகளின் சின்னத்தையும் வைத்திருந்ததாகவும், சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் இடையில் தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவர்களின் அறையில் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதாகவும் அதில் இணையத்தளத்திற்கு பிரவேசிக்கக் கூடிய GPRS வசதிகள் காணப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்தோடு,சிறைக்குள் அந்த கைதிகள் இவ்வாறான நிலையில் இருந்தமைக்கு தாமும் ஒரு காரணமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  December 1, 2011 at 3:48 PM  

ஒரு சில திருந்தாத நாய்களால் மற்றவர்களுக்கும் உவத்திரம்.
கடந்த கால சரித்திரம் எமக்கு நல்ல பாடங்களை கற்றுத்தந்துள்ளது. அழிவுகளுக்கு முளுக்காரணம் யார் என்பதை இன்னும் உணர முடியாத முண்டங்களாக வாழ்வதில் அர்த்தமில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com