Friday, December 2, 2011

ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 95வது இடம் இலங்கைக்கு 86 வது.

சர்வதேச அளவில், ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 95வது இடத்தில் உள்ள அதேநேரம் இலங்கை 86 இடத்திலுள்ளது. இந்த 86 ஆவது இடத்தை பல்கேரியா, ஜமேகா, பனாமா, சேர்பியா ஆகிய 5 நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 75வது இடத்திலும் பாகிஸ்தான் 134 இடத்திலும் உள்ளது.

ஊழலுக்கு எதிராக சர்வதேச அளவில் போராடி வரும் டிரான்பரன்சி இண்டர்நேசனல் என்ற சர்வதேச அமைப்பு, ஊழல்குறைந்த நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தியது. அந்த முடிவுகளின் படி, தற்போது ஊழல்குறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அளவில் ஊழல் குறைந்த நாடாக நியூசிலாந்து உள்ளது தெரியவந்துள்ளது.

ஊழல்குறைந்த நாடுகளின் பட்டியலில், முதலிடத்தில் நியூசிலாந்தும், முறையே மற்ற இடங்களில், டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இதில், 8வது இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

கடந்தாண்டு வெளியான ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலிடததில் உள்ள நியூசிலாந்து 9.5 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது. பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு 1 சதவீத கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்ணை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 183 நாடுகளில், மூன்றில் 2 பங்கு நாடுகள் 5 சதவீதத்திற்கு குறைவான கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்ணை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இலங்கை 3.3 கரெப்ஷன் பெர்செப்சன் , இந்தியா3.1 கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்களுடன் முறையே 86, 95வது இடத்தில் உள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com