Saturday, December 17, 2011

கொல்லப்பட்ட 600 பொலிஸார் தொடர்பில் கருணாவிடம் விசாரணை தேவை. ஆணைக்குழு

இனியபாரதி , ஈபிடிபி , மேஜர் சீலன் ஆகியோர் மீதுள்ள பல கொள்ளை, கொலை, கப்பம் பெற்றுள்ளமை தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர்.

சகல குழுக்களிடமும் உள்ள ஆயுதங்களை பறிப்பதே அரசின் நோக்கம். நிமால் சிறிபால டீ சில்வா


1990 ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரனிடம் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த மாதம் அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. அவ்வறிக்கை நேற்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்தி சட்டத்தை மீறியதான சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அவை குறித்து நன்கு விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி அறிக்கை தொடர்பாக கருத்துரைத்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுமக்களை இலக்கு வைத்து பாதுகாப்பு தரப்பினரால் தாக்குதல்கள் எவையும் நடத்தப்படவில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளார். இது தொடர்பான உண்மைத் தகவல்களைத் திரட்டி குற்றமிழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களின் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் முனைவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என்றும் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் காணியினை கொள்வனவு செய்யும் உரிமை அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் உண்டு என்பது அடிப்படை உரிமையாகும் என அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் போது நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி அவற்றை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை தமிழ் அரசியல் தலைமைகளுடன் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

சுயநலப் போக்குகளுக்காக நடத்தப்படும் அரசியல் நடவடிக்கைகளை விடுத்து தேசிய பிரச்சினைகளின் போது பொது உடன்பாட்டுடன் தீர்மானம் எடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசாங்கம் முழு மனதாக ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்பட்டது என்றும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

மேலும் அறிக்கையில் இனியபாரதி என்பவர் கிழக்கு மாணத்தில் பல கடத்தல், கப்பம் வசூலித்தல் முதலான பல குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு ஆணைக்குழு கொண்டுவந்தபோதிலும் அவருக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி ஆணைக்குழு கவலை கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படுவதுடன், இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி, இத்தகைய சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள், தவறான சிறைவைப்புகள், கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் சகிதம் கடத்தப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், அச்சம்பவத்தில் கருணாவினதும் ஏனைய எல்.ரி.ரி.ஈ. தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு குறித்து கூறினார்கள்.

கருணா எனும் முரளிதரனிடம் ஆணைக்குழு இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அவர் இக்கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

எனினும் மேற்படி 600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது என ஆணைக்குழு கருதுகிறது.

ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கப்பம் வசூலித்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஈபிடிபிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கருதுகிறது. விசாரணை இல்லாவிட்டால் தண்டனைப் பயமற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.

மேஜர் சீலன் என்பவர் தொடர்பாக கடத்தல், கப்பம் வசூலித்தல், பாதுகாப்புப் படைகளின் சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளைடித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டுவரப்பட்டன. இது தொடர்பாக அப்பகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு ஆணைக்குழு கொண்டுவந்தபின் மேஜர் சீலனின் சகா ஒருவர் கைதானார். எனினும் குறித்த பிரதான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.

எனவே, இவ்விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழுவானது சட்டவிரோத ஆயுதக்குழுக்களை நிராயுதபாணி ஆக்கவேண்டும் என தெரிவித்ததுடன், விசாரணைகள் குறித்து ஆணைக்குழு மீள வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற நான்காவது கட்ட ஈழப்போரில் 11,812 விடுதலைப் புலிகள் மரணமடைந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஜுலையில் போர் தொடங்கியதில் இருந்து 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் படைப்பிரிவிற்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் தரப்பில் 5556 பேர் கொல்லப்பட்டனர் என்றும், போரின் போது 169 இராணுவத்தினர் காணாற்போனதாகவும், 28,414 படையினர் காயமடைந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் 22,247 பேரை இந்தக் காலப்பகுதியில் இழந்துள்ளதாகவும், இவர்களில் 11,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சீருடைகளை வைத்தும், கழுத்துப்பட்டி மூலமும் மேலும், புலிகளின் தகவல் தொடர்புகளை இடைமறித்தும் இதனை உறுதி செய்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.http://www.blogger.com/img/blank.gif

முழு அறிக்கையை வாசிக்க

373

The escalation of political violence and unlawful possession and use of firearms bypoliticians and their supporters.

9.204

The Commission strongly recommends that the Government should take immediateaction to disarm persons in possession of unauthorized weapons and also prosecutesuch offenders.

9.205

At the time of writing this report the Commission became privy to a serious shootingincident where two politicians of the same political party were involved, following therecently concluded local government elections, resulting in a number of deaths andinjuries. Such a deplorable lack of mutual accommodation by the politicians andresorting to such blatant violence to resolve issues, is hardly the example the peoples’representatives are called upon to set at this juncture of the national reconciliationprocess.

9.206

The Commission wishes to specifically highlight the following instances brought to itsattention by a number of representers.

9.207

There were allegations made that one Bhareti is alleged to have committed severaloffences of abduction, extortion, robbery etc. in the Eastern province. This matter wasbrought to the notice of the relevant authorities by the Commission. The Commissionregrets to note that no meaningful action has been taken against the allegedwrongdoer. Two senior retired police officers and two representers who had beenvictims of an abduction along with around six hundred police officers, referred to thealleged involvement of Karuna the then LTTE leader of the Eastern Province and severalother members of the LTTE, regarding the murder of the police officers, who had beenordered to lay down arms and surrender to the LTTE.Pursuant to the allegations made by the representers the Commission questioned MrMuralidharan
alias
Karuna about the allegations leveled against him. He denied theallegations in respect of these murders.However, this Commission regrets to note that up to date no investigation has beenconducted in respect of the killing of six hundred policemen. The Commission is of theview that this matter warrants

a full investigation because of the nature of the crimeand the bearing it has on reconciliation.

9.208

Several representers complained about acts of extortion that were being committed bymembers of the Eelam Peoples’ Democratic Party. The Commission is of the view thatsince there are several complaints against the EPDP there should be a full investigation

regarding these allegations. Absence of an investigation would create a sense of impunity.

9.209

Many representers brought to the attention to the Commission illegal activities of agang led by a person called Major Seelan, in connection with offences of abduction,extortion and robbery using the security forces facilities as a cover. The Commissionbrought this to the attention of the DIG of the area. Consequently, an accomplice of Major Seelan was apprehended. However the alleged principal offender still remains atlarge.

9.210

In this regard the Commission reiterates the importance of giving full effect to all of itsInterim Recommendations concerning illegal armed groups.

9.211

The Commission regrets that full effect has not yet been given to its InterimRecommendations.

9.212

The Commission notes that Police officers serving in the provinces do not have adequateaccess to legal expertise regarding investigations and the conduct of prosecutions. In thecircumstances the Commission strongly recommends setting up units of the AttorneyGeneral’s Department in the Provinces to guide and advise the Police regarding criminalinvestigations, prosecutions and other matters touching upon the criminal justicesystem.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com