Friday, December 23, 2011

அல்கொய்தா தீவிரவாதி தலைக்கு ரூ.107 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

அல்கொய்தா தீவிரவாதி தலைக்கு ரூ.107 கோடி பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிரியாவை சேர்ந்தவர் யாசின் அல் சூரி. இவருக்கு எசடின் அப்துல் அசீஷ் கலில் என்ற பெயரும் உண்டு. அல்கொய்தா தீவிரவாதியான இவர் ஈரான் நாட்டின் உதவியுடன் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு நிதி உதவி மற்றும் அதற்கு ஆட்கள் தேர்வு செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்களின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறார். எனவே, இவரை கண்டு பிடிக்க அமெரிக்க உளவுத் துறை தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

அதையடுத்து இவர் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.107.6 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி ராபர்ட் ஹார்டஸ் தெரிவித்துள்ளார்,. இவருடன் மேலும் 5 பேரின் தலைக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு முதல் தீவிரவாதிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா சன்மானம் வழங்கி வருகிறது. அதுவரை 70 பேருக்கு, ரூ.1076 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹார்டஸ் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  December 24, 2011 at 7:43 PM  

As said in the bible,before you try to take out the speck from the other's eye you should realize there is a log in your eye.First try to remove it from your eye.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com