Friday, December 16, 2011

ஓபாமாவை விஞ்சிய ஆவுஸ்திரேலிய பிரதமர். 5 கோடியே 41 லட்சம் சம்பளம்.

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது, அந்த நாட்டு பிரதமர் ஜுலியா கில்லார்ட்டின் சம்பளத்தை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவருக்கு இனி ஆண்டுக்கு 4.76 லட்சம் டாலர் சம்பளம் வழங்கப்படும். அது இலங்கை ரூபாயின் மதிப்பில் ரூ.5 கோடியே 41 லட்சம் ஆகும்.

அதன்படி சம்பளம் பெறும் உலக தலைவர்களின் பட்டியலில் ஜுலியா கில்லார்ட் முதலிடம் பிடித்துள்ளார். ஏனெனில், இவரை விட அமெரிக்க அதிபர் ஒபாமா குறைவாகவே சம்பளம் பெறுகிறார். அவர் ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் மட்டுமே சம்பளம் வாங்குகிறார். இது இலங்கை ரூபாயின் மதிப்பில் ரூ.4 கோடியே 55 லட்சமாகும்.

இவருக்கு அடுத்தப்படி யாக, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆண்டுக்கு 2.21 லட்சம் டாலர் இது இலங்கை பெறுமதியல் 2 கோடியே 51 லட்சங்களாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com