Friday, December 30, 2011

சுவீடன் நாட்டு செய்தியாளர்களுக்கு எத்தியோப்பியாவில் 11 ஆண்டு சிறை

சுவீடன் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்கள் இருவருக்கு எத்தியோப்பிய நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. செய்தியாளர் மார்ட்டின் ஷிப்பி, புகைப்படச் செய்தியாளர் ஜோஹன் பெர்ஸ்ஸன் ஆகியோர், நாட்டிற்குள் கள்ளத்தனமாகப் புகுந்தததோடு அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாகவும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ம்சு சிர்காகா, அம்ஹரிக் மொழியில் வழங்கிய தீர்ப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது.

தண்டனையை அறிந்த சுவீடன் செய்தியாளர்கள் எவ்வித கலக்கமும் இன்றி காணப்பட்டனர் என்று நீதிமன்றத்தில் இருந்த ஏஎப்பி செய்தியாளர் கூறினார்.

விசாரணைகள் நீதிமன்றிற்கு எடுக்கப்பட்டபோது குற்றவாளிகள் தாம் நாட்டினுள்ள சட்டவிரோதமாக நுழைந்தமை குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டதுடன் , தம்மீது சுமத்தப்பட்டிருந்த ஏனைய குற்றங்களை மறுத்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com