Wednesday, November 2, 2011

மட்டக்களப்பு ஊழியர் சேமலாப நிதி பெறுவோர் விபரம் கணினி மயமாகின்றது.

அரசகூட்டுத்தாபனங்கள் அதிகார சபைகள் மற்றும் தனியார் துறையில் கடமைபுரியும் ஊழியர்களின் சேமலாப நிதி பெறும் அங்கத்தவர்களது நிதியத்தை பாதுகாக்கவும் கொடுப்பனவுகளை இலகுப்படுத்தவும் நவீன தொழில்நுட்ப முறைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்ப்படுத்த தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி பெறத்தகுதியுள்ள தொழிலாளர்களின் விபரங்கள் இலத்திரனியல் ஊடாக மீள் பதிவு செய்யும் பணிகள் தொழில் அமைச்சின் ஆலோசனைக்கு அமையதொழில் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இப்புதிய பதிவு நடவடிக்கை எதிர்வரும் 4 ஆம் திகதிமட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்படும். தலைமையக தொழில்நுட்ப அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் இந்த மீள்பதிவு செயற்த்திட்;டத்தில் ஊழியர் சேமலாப நிதி பெறும் அனைத்து அங்கத்தவர்களும் இணைந்து கொள்ளுமாறு மாவட்ட உதவிஆணையாளர் ஆர்.லக்ஷ்மிதரன் தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டம் நடைமுறைப்டுத்தப்பட்டதன் பின்னர் ஊழியர் சேமலாப நிதி பெறும் அங்கத்தவர்களின் விபரங்களை இலகுவாக அறிந்து கொடுப்பனவுகளை துரிதமாக வழங்க வழிகிட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com