Monday, November 21, 2011

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

தபால் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்ததாக தபால் ஊழியர்கள் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையால் கொழும்பு தபால் பரிமாற்றகத்தில் குவிந்துள்ள 18 இலட்சம் கடிதங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்படவுள்ளது.

இது தொடர்பில் தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும், இதன்போது எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தபால் தொழிற்சங்க ஒன்றியம் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் குவிந்துள்ள 18 இலட்சம் கடிதங்களையும் வகைப்படுத்தி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com