Tuesday, November 15, 2011

பிரதேச சபை உறுப்பினரின் பணத்தை கொள்ளையிட்டவருக்கு பிணை

ஜா-எல பிரதேச சபை உறுப்பினர் ஒருவருடைய 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 7 ஆயிரத்த 500 ரூபா ரொக்கப் பிணையிலும். இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

15.10.2011 அன்று பிரதேச சபை உறுப்பினர் தங்க நகைகளை அடகு வைத்து 8 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார். நண்பர்களிடமும் அன்றைய தினம் மூன்று இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

இந்தப் பணத்துடன் பிரதேச சபை உறுப்பினர் ஜா-எல உனவட்டுன பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதியொன்றுக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளார்.இரவு 9.30 மணியளவில் அவர் வீடு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறும் போது இரண்டு நபர்கள் அவரது முகத்தை பல தடவைகள் தாக்கி விட்டு பிரதேச சபை உறுப்பினரிடமிருந்த 11 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என்று வழக்கின் முறைப்பாட்டாளரான பிரதேச சபை உறுப்பினர் ஜா –எல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜா-எல உனவட்டுன பிரதேசத்தில் உள்ள சூதாட்ட இடமொன்றுக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சூதாட்டத்தில் அவர் ஜெயித்ததாகவும், ஜெயித்த பணம் தொடர்பாக அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து பிரதேச சபை உறுப்பினரிடமிருந்த பணத்தை சிலர் பறித்துக்கொண்டு சென்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதை தவிர அங்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெறவில்லை என்று கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஜா-எல பொலிசரிடம் தெரிவித்துள்ளனர்.

15.02.2012 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com