Friday, November 4, 2011

விண்வெளி நிலையத்தில் இணைந்தது சீன விண்கலம்

பூமிக்கு மேலே, 343 கி.மீ., தொலைவில், சீனா உருவாக்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன், அந்நாட்டின் "ஷென்ஷாவூ-8' என்ற ஆளில்லா விண்கலம், நேற்று வெற்றிகரமாக இணைந்தது. அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும், "மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு' போட்டியாக, சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை, 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, "தியான்காங்-1' என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.

சீனாவின் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூக்குவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் "ஷென்ஷாவூ-8' என்ற ஆளில்லா விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஷென்ஷாவூ-8 விண்கலம், நேற்று "தியான்காங்குடன் அமைதியான முறையில் இணைந்தது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com