Friday, November 11, 2011

கொழும்பு பல்கலைக்கழக மாணவிகளிடமிருந்து விடுதிக்கான மின்சாரக் கட்டணம் அறவீடு

கொழும்பு பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் வருடாந்த விடுதிக் கட்டணத்தோடு 2400 ரூபா மின்சாரக் கட்டணத்தையும் பல்கலைக்கழக நிர்வாகம் சேர்த்துள்ளது. இதனால், பல்கலைக்கழக மாணவிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர். தற்போது வருடாந்த விடுதிக் கட்டணமாக 3000 ரூபா அறவிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக 2400 ரூபாவை மின்சாரக் கட்டணமாக அறவிடுவதாக நிர்வாகசபை அறிவித்துள்ளது. இதனால் தூரப் பிரதேசத்திலிருந்து இருந்துவரும் பின்தங்கிய பொருளாதாரப் பின்னணியை உடைய மாணவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதால், உடனடியாக இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். இல்லையேல் போரட்டத்தில் இறங்கவேண்டி ஏற்படும் என பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com