Monday, November 21, 2011

லண்டனை தொடர்ந்து கனடாவிலும் மாவீரர் நிகழ்வொன்று ரத்து.

உருத்திரகுமாரனின் உதவிப் பிரதமர் திருச்செல்வத்திடம் சரணம்!
பிரபாகரன் பிஸ்டலுடன் நிற்கும் படத்துடன் வெளியாகிய 'மாவீரர் நாள்' ரத்து செய்யப்பட்டுள்ளது. உருத்திரகுமாரனின் பிரிவினர் அறிவித்த நிகழ்வு டவுன்ஸ் வியூ பார்க்கில் நடை பெறாது என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பிரிவினர் கடைகளில் ஒட்டியிருந்த போஸ்டர்களை திருச்செல்வம்-நேரு குணா - கமல் பிரிவினரின் கும்பல்கள் கடைகளில் புகுந்து கிழித்தெறிந்து வீசியதையடுத்து அவர்களின் மாவீரர் உண்டியல் விழா நடை பெற மாட்டாது என்றும் தெரிய வந்துள்ளது. திருச்செல்வம்-நேரு குணா - கமல் கும்பல் தங்களை 'நெடியவன்' கும்பல் என்றே அடையாளப்படுத்தி வருகின்றனர்.

டொராண்டோ நகருக்கு வெளியே உள்ள மார்க்கம் பெயார் திடலில் திருச்செல்வம்-நேரு குணா - கமல் கோஷ்டியினரின் மாவீரர் விழா நடை பெற உள்ளதாக புதிய சுவரொட்டிகள் அறிவிக்கின்றன. அந்த சுவரொட்டிகளில் புலிஇ பிரபாகரன்இ மாவீரர் என்ற சொற்களைக் காணவில்லைஇ பதிலாக 'தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்-2011 என்ற பெயருடன் வெளிவந்த அந்த சுவரொட்டியில் கனடிய தமிழர் சமூகம்இ கனடா தமிழ் மாணவர் சமூகம் சார்பாக கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் என்ற வசனங்கள் காணப்படுகின்றன. கீழே கனடிய தமிழர் தேசிய அவைஇ தமிழ் இளையோர் அமைப்புஇ தமிழ் மகளிர் அமைப்புஇ கனடிய தமிழர் விளையாட்டுத் துறைஇ தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் என்ற பெயர்களும் 416 - 450 - 9661 என்ற தொலை பேசி இலக்கமும் காணப்படுகின்றன. இந்த அமைப்புக்கள் முன்னர் தடை செய்யப்படுள்ள 'உலகத்தமிழர் இயக்கத்தின் கீழ் இயங்கியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேரு குணா ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் தனக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டு சகலருக்கும் காதில் பூ சுற்றிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கடந்த தமிழீழ 'ஜனநாயக' அரசின் பிரதமர் என்று திருச்செல்வம் முடி சூட்டிக் கொண்டு வெகு நாட்கள் ஆகிறது. திருச்செல்வம் முதலான 'கொள்ளி' வைப்பவர்களை உருத்திரகுமாரன் கும்பல் அகற்றிவிட்டு புதியவர்களை தங்களின் கடல் கடந்த ஈழத்து பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமித்து விட்டதாகவும் அவர்களின் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

உலகத்தமிழர் இயக்கத்தினை அப்படியே பிரதி நிதித்துவப்படுத்தும் திருச்செல்வம்-நேரு குணா கோஷ்டியினர் புதிய பானையில் பழைய கள்ளை இறக்கி உண்டியலுடனும் அதே அடாவடிதனங்களுடனும் புறப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலிடம் புலிஇ தமிழ் என்று வீடு வீடாக போய் கதவைத் தட்டிய உண்டியல் கோஷ்டிகள் உள்ளனர் என்பதும்இ அவர்களின் பணபலமும்இ ஆட்பலமும் உருத்திர குமாரன் கோஷ்டியினரிடம் இல்லை என்பதும் தெரிந்த விடயங்கள். இருபது சதவீதம் கமிஷனுக்கு உண்டியல் காவியவர்கள் எப்படியும் அந்த தொழிலைக் கைவிடுவது சாத்தியமில்லை. கனடிய காவல்துறை கண்டிப்பாகக் கண்காணிக்கும் என்பதனால் பிரபாகரனையே காணாமல் பண்ணி விட்டுள்ளனர். ஆயினும் இவர்கள் எந்த வேஷத்தில் வந்தாலும் எல்லோருக்கும் இவர்களை யாரென்று நன்றாகவே தெரியும்.

உழைப்பு இல்லாமலேயே ஹாயாக வாழப் பழகிய இவர்களுக்கு அடுத்தவனின் பணம் தேவைப்படுகிறது. அதிலும் திருச்செல்வம் போன்ற பெருச்சாளிகள் 'பணம்' வராத எந்த முயற்சிகளிலும் இறங்கவே மாட்டார்கள்.

திருச்செல்வத்தின் குருநாதர் முன்னாள் நல்லூர் எம்பி சிமோல் அருளம்பலம் நல்லூர் கிராமசபைத் தலைவராக இருந்த பொழுது நடந்த களவு பற்றி விசாரிக்க வந்த போலீசார் ஓடு பிரித்து இறங்கிய கள்ளன் எப்படி சிலந்தி வலையை அறுக்காது உள்ளே இறங்கினான் என்று ஆச்சரியப்பட்டு வயிறு குலுங்க சிரித்தார்கள்.

கனடாவில் புலிகளின் 'மூத்த அரசியல் விமர்சகர்' என்ற பெயருடன் இறுதி யுத்த நாட்களில் 'புலிகள் பதுங்குவது பாயத்தான்' என்று கப்சா விட்ட ஆள்த்தான் இந்த திருச்செல்வம். புலிகள் துண்டைக் காணோம்இ துணியைக் காணோம் என்று கால் பிடரியில் முட்ட மாவிலாறிலிருந்து முள்ளி வாய்க்கால் வரை ஓடியதை ரூபவாஹினியின் சமன் ராம விக்ரமாவின் வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள்.

இந்த கும்பல்களுக்கு இலங்கை மக்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதும் கனடாவின் சொகுசு வாழ்வில் அடுத்தவனின் பணத்தை சுருட்டி வாழக் கற்றுக் கொண்டவர்களே இந்தக் கும்பல்கள். இப்பொழுது மெதுவாக புலிக் கதைகளைக் கைவிட்டதுடன் புலிக் கொடியையும் சுருட்டி வீசியுள்ளனர்.

கனடாவில் ராம் சிவலிங்கம் என்பவர்தான் உருத்திரகுமாரனின் துணைப் பிரதமர். இவர் தன்னை டாக்டர் சிவலிங்கம் என்றே குறிப்பிடுவது வழக்கம். என்ன மாதிரி டாக்டர் என்று யாருக்கும் தெரியாது. வந்த நாள் தொடக்கம் தொழிலே செய்யாது சீவிக்கும் ஒரு ஆசாமி.

உருத்திரகுமாரனின் கோஷ்டியினர் முதலில் 'பொற்குவை தாரீர்' என்று டம்பமாக அறிவிப்பு செய்து பார்த்தார்கள். யாரும் மசியவில்லை. பின்னர் கடல் கடந்த ஈழத்தின் அடையாள அட்டையை பெறுங்கள் என்று நூறு டாலர் 'அமுக்க' திரிந்தார்கள். அதுவும் புஸ் வாணமாகியது. பின்னர் குடும்பத்துக்கு இருபது டாலராவது கொடுங்கள் என்று கெஞ்சினார்கள். அதுவும் 'அவுட்டாவாகியது'. பின்னர் ஐந்து டாலர் லொத்தர் டிக்கட் வாங்குங்கள் என்றும் இறங்கினார்கள். இப்பொழுது ஆளுக்கு ஒருடாலராவது கொடுங்கள் என்று அழுகிறார்கள்.


பின்னர் தீபாவளியை சிங்களவன் கொண்டாடுகிறான்இ தடுக்க அலையாக வாருங்கள்இ மலையாக குவியுங்கள் என்று கூவி இருபது பேரளவில் மட்டையுடன் நின்றனர். அதிலும் பலர் முகங்களை மறைத்து நின்றது பரிதாபக் காட்சியாக இருந்தது. மண்டபத்துள் வந்த ஐந்து காவாலிகளையும் செத்த எலியை வீசுவது போல பாதுகாப்பு உத்தியோகத்தர் வெளியே வீசியதையடுத்து வெகுண்ட இவர்கள் 'மாவீரர் நாள் -2011 ' என்று போஸ்டர் ஒட்டி அதுவும் மற்றைய கோஷ்டியினால் கிழித்தெறியப்பட்டு விட்டது.

பின்னர் புரோக்கர்களின் மூலம் பேசி 'கிடைப்பதில்' எத்தனை சதவீதம் என்று கேட்டு அமைதியகியுள்ளனர். அதற்கு கமலின் பத்திரிகையில் 'ஒற்றுமையாக' நடத்துகிறோம் என்று செய்தியும் வந்துள்ளது. அதாவது 'தமிழனின் தலையில் மிளகாய் அரைக்க' சமரசம் என்று சரணாகதி அடைந்துள்ளனர். அந்த புரோக்கர்களான 'வல்வை புளூஸ்' என்ற கோஷ்டியும் 'வெளிப்படைத்தன்மை' கொண்டதாக விழா அமையும் என்று ஒரு சுத்து சுத்தியுள்ளனர். புலிக் கும்பல்கள் எப்பொழுது 'வெளிப்படையாக' கணக்குக் காட்டியிருக்கிறார்கள்?

தாங்களாகவே போய் தலையைக் கொடுத்து மொட்டை போடுதல் அல்லது தங்களின் தலையில் மிளகாய் அரைத்தல் என்பனவற்றை விடுதலை போராட்டம் என்று எண்ணி போகும் முட்டாள்கள் இருக்கும் வரையில் இந்தக் கும்பல்களின் காட்டில் மழைதான்.

ஆயினும் 'பொங்கு தமிழ்' என்று பொங்கி வழமை போல ஆட்கள் வராதபடியால் விரக்தியடைந்த நெடியவன் கும்பல் எனப்படும் திருச்செல்வம் கும்பல் 'மாவீரர்' தினத்திலாவது வாரிவிடலாம் என்று ஆக்ரோஷமாக களமிறங்கியுள்ளனர்.

கனடிய காவல்துறை அகலக் கால் வைத்தால் இந்த கூத்தும் நடக்க முடியாது போய்விடும் என்று சில 'அரசியல் அவதானிகள்' கருதுகின்றனர். மொத்தத்தில் இந்த நாசகாரிகள் தொலைந்தால் தமிழர்களுக்கு நிம்மதிதான்!
0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com