Tuesday, November 15, 2011

ஜப்பான் உதவியுடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் டிஜிட்டல் வரைபடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் டிஜிட்டல் வரைபடம் ஒன்றை தயாரிப்பதற்கு ஜப்பான் நிதி உதவி வழங்கியுள்ளது. இலங்கை நில அளவையியல் திணைக்களம் இந்த வரைபடம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. 1-10000 என்ற அளவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தை உள்ளடக்கக்கூடிய வகையில் டிஜிட்டல் வரைபடமொன்று தயாரிக்கப்பட உள்ளது.

போரின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் வரைபடம் ஒன்றை தயாரிப்பதற்கான சகல நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளதாகக் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com