Tuesday, November 1, 2011

பாக்-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியாவை மிரட்ட அல்லவாம். சீனா விளக்கம்.

பாகிஸ்தான் அரசு கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் அதிக நட்புறவு கொண்டுள்ளது. சீனா பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை அளித்து வருகிறது. இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் இந்த உதவி அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முதன் முறையாக பாகிஸ்தானும், சீனாவும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்த ஆண்டு 2 முறை இந்த பயிற்சியில் ஈடுபடுவதற்கு அவர்கள் திட்டம் வகுத்துள்ளனர். இந்தியாவை மிரட்டும் வகையிலேயே இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் சீன ராணுவம் இந்த கூட்டு பயிற்சி இந்தியாவை மிரட்டுவதற்கு இல்லை என்று அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக சீன ராணுவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நட்பு முறையிலும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகவும் சீனாவும், பாகிஸ்தானும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. எந்த ஒரு மூன்றாவது நாடையும் (இந்தியா) அச்சுறுத்துவதற்காக நாங்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. எங்களுக்குள்ள ராணுவ திறமையை பரிசோதித்து கொள்ளும் விதமாக பயிற்சியில் ஈடுபடுகிறோம். இது ஒரு பாரம்பரியமான பயிற்சிதான். இரு நாடுகளுக்குமே தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன. இதை சமாளிக்கும் விதமாக இந்த பயிற்சி அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சீன பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. பயிற்சி நடக்கும் தேதி பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. சீனாவை சேர்ந்த ஏராளமான ராணுவ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், பாகிஸ்தானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com