Thursday, November 17, 2011

இலங்கைஅரசினால் இயக்கப்படும் தலைமைச் செயலகத்தின் பொய் முகம் அம்பலம்

புலிகளின் தமைமைச் செயலகத் தலைவர் என்ன சொல்கின்றார் என்பதை கேட்க வேண்டுமா வீடியோவை அழுத்துங்கள்.

புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாடுவது, அதாவது இந்நிகழ்வில் யார் பணம் அறவிடுவது என்ற விடயத்தில் புலிகளின் பினாமிகளிடையே பெரும் போர் இடம்பெற்றுவருகின்றது. இப்போர் இணையச் சமர், மின்னஞ்சல் சமர் என ஆரம்பித்து ஐரோப்பா எங்கும் அடிதடி , வாள்வெள்டு , துப்பாக்கி பிரயோகம் என தமது பயங்கரவாத செயற்பாடுகளுடன் முடிவுறும் நிலையில் உள்ளது. இதற்காக குண்டர்களுக்கு ஆயிரக்கணக்கான ஐரோக்களும், பவுண்டுகளும், டொலர்களும் செலவிடப்படுகின்றது.

இவ்வாறு செலவிட்ட பணத்தினூடாக அண்மையில் பிராண்ஸ் சிறையிலிருந்து மீண்ட செம்மல் றேகன் , பதிரி என அழைக்கப்படுகின்ற புலி வாங்கிக்கட்டியது. மேலும் புலிவால்கள் பலவற்றின் மனைவி மக்கள்கூட தெருக்களில் வைத்து மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவங்களும் நிறைவேறியுள்ளது.

இந்நிலையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒலிவடிவத்தை கேட்டுப்பாருங்கள், புலிகளின் தலைமைச் செயலகத்தை சேர்ந்த பண்டியன் எனப்படும் நபர் ஒருவர் பேசுவதை வெளியிட்டுள்ள அனைத்துலகச் செயலகம் என்போர், இவர் சிறிலங்கா அரசின் கைக்கூலி எனவும் தெரிவிக்கின்றனர்.

புலிகள் புலிகளுக்குள்ளே பணத்திற்காக அடிபடுவது, பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டாலும், புலிகளை வைத்து இணையவிபாரம் செய்யும் இணையத்தளங்கள் இவற்றை வெளிவிடாமல் தவிர்த்து வருவதன் நோக்கம், புலிகளிடையேகாணப்படும் காணப்படும் பிளவுகளையும் , பிளவுக்கான நோக்கங்களையும், புலிகள் ஒருவர் மேல் ஒருவர் மேற்கொள்ளும் குற்றச்சாட்டுக்களையும் மக்கள் அறி ந்துகொண்டால் தமது இணைய வியாபாரத்திற்கு ஆப்பு இறுகிவிடும் என்பதாகும்.

புலிகளால் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்படும் எதிர்பிரச்சாரங்களில் ஒன்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் வாசகர்கள் ஆகிய உங்கள் முன்வைக்கின்றோம், இங்கு ஒரு தரப்பினர் மறு தரப்பின்மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பார்க்கும்போது, புலிகள் தமது எதிரிகள் மீது காலாகாலமாக சுமத்தி வந்த அவர்களுக்கு வாய்ப்பா டமான அத்தனை குற்றச்சாட்டுக்களும் அடுக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து மக்களாகிய நீங்கள் உணரவேண்டியது யாதெனில் புலிகளின் பாசறைகளில் வழர்ந்த இவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பெயரில் எத்தனை தமிழ் உயிர்களை தமது சுயலாபங்களுக்காக கொலை செய்துள்ளார்கள் என்பதாகும்.

இனி புலிகள் என்ன சொல்கின்றார்கள் எனப் பார்ப்போம்.

வணக்கம் தமிழ் மக்களே... தேசவிரோதிகளை அம்பல்ப்படுத்தும் எமது முயற்சியில் சிங்கள, மற்றும் இந்திய புலனாய்வாளர்களால் இயக்கப்படும் தலைமைசெயலகம் என்ற பெயரில் இயங்கும் கட்டமைப்பின் நிதிப்பொறுப்பாளரும், அதன் உண்மையான தலைமைத்துரோகியுமாகிய பாண்டியன். இந்திய ''றோ''அதிகாரிகள் சிலருடனும் ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சிலருடனும் மேற்கொண்ட உரையாடல்கள் பல எமக்கு ஆதாரமாக கிடைத்துள்ளன.

அந்தவகையில் நிதிமோசடி என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி அனைத்துலக தொடர்பகத்தையும், அதன் தேசியசெயற்பாட்டாளர்களையும் எவ்வாறு செயலிளக்க செய்வது என்பது குறிது தெளிவாக ஆராய்ந்துள்ளனர். இதன்போது பண்டியன் தமிழீழ விடுதலை புலிகளில் அங்கம் வகித்த காலத்தில் தனது பதவி ஆசை காரணமாக தனக்குப் போட்டியாக இருந்த போராளிகள் சிலரை இதே வளியில் போட்டுத்தள்ளிய தனது அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட இந்த அரக்கன் இன்று தேசியச்செயர்ப்பாட்டாளர்கள் மீது நிதி மோசடி, கணக்கு காட்டவில்லை என்ற குற்றங்களை சுமத்தி அவர்களை ஓரங்கட்டி ''ExeL'' மண்டபத்தில் போட்டி மாவிரர் தினத்தை அறிவித்தும் விட்டனர். இதன் பின்னணியில்த்தான் புலிகளின் சர்வதேசவலைப் பின்னலை குலைத்து புலம்பெயர் தமிழர்களயும் தற்போதைய தாயகத்தமிழர்கள் போல் கையறுநிலைக்கு த்ள்ளும் திட்டம் பொதிந்துள்ளது.

எதிரியின் இந்தத்திட்டத்திற்கு விலை போனவர்களின் கூட்டமைப்புத்தான் தலைமைச்செயலகம் என்பது படிப்படியாக தெளிவாகி வருகுறது. இந்த்க்கூட்டத்திற்கு இலண்டனில் தலைமவகிக்கும் அனோயா, சங்கீதன் சீர்மாறன் தும்பன் போன்றவர்கள் விளக்கம் கூறவேண்டிய ஒலிப்பாதிவொன்றை இங்கே இணைத்துள்ளோம்.

கணக்குப்பிரச்சினையை காரணம் காட்டி புலம்பெயர் செயற்படுகளை சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இவர்களின் தலைவர், நிதிப்பொறுப்பாளர், தான் கணக்குகாட்ட மறுத்து தமிழர்களை எல்லாம் முட்டாளாக்க முனைவதை ஒலிப்பதிவில் கேளுங்கள். தான் மட்டுமே தியாகி என்றும் நீங்கள் எல்லோரு மயிராண்டிகள் என்றும் கூறும் இந்தத் தேசவிரோதி குறித்து. GTV, IBC ,ஸ்கந்தா ,சுகந்தா,சங்கீதன்,அனோசா, சீர்மாறன் போன்றோர் பதிலளிப்பார்களா?????????????. பாண்டியனுடன் தமக்கு தொடர்பில்லை என்று இவர்கள் மறுப்பார்களானால்......( எமது அடுத்த இதளை மறக்காமல் பாருங்கள் அதில் அதற்கன பதில் ஒலிப்பதிவாக வெளிவரும் )

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகமாம் , புலிகளின் தாகம் புலம்பெயர் தமிழரின் சொத்தாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com