Tuesday, November 15, 2011

கார்த்திகைப் பூவும் காணாமல் போன போஸ்டர்களும்! – மு.சிவானந்தன்

கனடாவில் கார்த்திகைப் பூ படம் போட்ட பட்டன்களை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். கேட்டதற்கு வெள்ளையர்கள் 'பொப்பி" பூ பட்டன்களை விற்பது போல புலிகளின் மாவீரர்களின் நினைவாக விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதென்ன பூ என்று கேட்க அது கார்த்திகைப் பூ என்றும் கார்த்திகை மாதத்தில் பூத்து விடுவதால் அந்தப் பூவை பாவிக்கிறார்கள்.

இன்னொருவர் தமிழீழத்தின் "மலர்" அது என்பது என்றும் விளக்கமளித்தார். தமிழர்கள் இந்தப் பூவை தொடக் கூட மாட்டார்கள் என்று சொல்ல விபரம் புரியாது நின்றவர்களிடம் அது ஒரு "நஞ்சு" என்றும் விளக்கமளித்தபோது "அப்படியா" என்று அசடு வழிந்தார்கள். அந்தப் பூவைக் கண்டிருக்கிறீர்களா என்று வினவிய போது இல்லையென்றும் அது காடுகளில் வளரும் போலத் தெரிகிறது என்றும் சொல்லிக் கொண்டு மெதுவாக நகர்ந்தனர்.

புலிகளின் இந்த பூ விவகாரத்தைநோக்கும் போது அந்த பூ பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் அலட்டுகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. புலிகள் இந்த பூவை தமிழரின் பூ என்பதன் மூலம் தமிழர்கள் நச்சுக் காளான்கள் அல்லது நஞ்சு வைப்பவர்கள் என்பதை "சிம்பாலிக்காக" காட்டியிருக்கிறார்கள். புலிகளின் கூத்துக்களை நோக்கும் பொழுது அது உண்மை என்றே தெரிகிறது.

கனடாவில் மாவீரர் தினம் டொரன்டொ டவுன்ஸ் வியூ பார்க்கில் 27 ஆம் திகதிநடை பெறும் என்றும் "கனடிய சட்ட விதிகளுக்கமைய வெளிப்படைத் தன்மை கொண்டதாக நடை பெறும் என்று" உருத்திரகுமரான் கும்பலின் பத்திரிகையில் வெளியான விளம்பரம் பல போஸ்டர்களாக அச்சிடப்பட்டு தமிழர்களின் கடைகளில் ஒட்டப்பட்டிருந்தது. இப்பொழுது அந்தப் போஸ்டர்களைக் காணோம்! கேட்டால் இன்னமும் வரவில்லை என்று காது குத்துகிறார்கள்.

கனடாவில் புலிகள் 'தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள்". அப்படியிருக்க எந்த கனடிய சட்ட விதி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவனும், இன்டர்போலினால் தேடப்படும் கொலைகாரனுமான பிரபாகரன் கொலைக் கருவியான பிஸ்டலுடன் நிற்கும் படத்தை பிரசுரித்திருக்கிறார்கள்? ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மாயமாகியதன் பின்னணியில் இல்லாத ஈழத்துக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு கும்பலான் திருச்செல்வம்-நேரு குணா தலைமையிலான குண்டர் கோஷ்டி என்று பலர் பெசிக் கொள்ளுகிறார்கள். கனடிய பொலிசார் போஸ்டகளை அகற்றும்படி சொல்லியுள்ளதாகவும் தகவல் உண்டு.

ஆயினும் கனடியர்களுக்கே "கடுக்காய்" கொடுக்கும் அந்த பிரசுரம் மறைந்து போனதில் யாருக்கும் துக்கம் இல்லை! கடல் கடந்த ஈழம் என்று தொடங்கி பின்னர் இரண்டாகிப் போன இந்தக் கும்பலுக்கு இப்பொழுது இரண்டு பிரதமர்கள் இருக்கிறார்கள். ஒருவர் உருத்திரகுமாரன். மற்றவர் திருச்செல்வம். இந்த திருச்செல்வம் சிமோல் அருளம்பலத்தின் செயலாளராக இருந்து அவருக்கே காலை வாரிய ஆசாமி.

பிறக்காத பிள்ளைக்கு சாதகக் கூறிப்பு எழுதும் இந்த கோஷ்டிகள் தமிழர்களின் பணத்தில்த்தான் குறியாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது!

...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com