Facebook க்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு
கன்சாசிலுள்ள ஜோன் கிரகம் என்ற சட்டவாளர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சமூக வலைப்பின்னல் Facebook மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்த சமூக வலைப்பின்னல் Facebook கை அமெரிக்காவிலுள்ள 150 மில்லியன் பயனாளர்களதும் நிலையைக் குறிப்பிடுகின்றது.
இத்தளத்திலிருந்து வெளியே வந்த பின்னரும் இணைய உலாவலைப் பதியும் ஒரு தடந்தொடரும் cookie இனைப் பயன்படுத்துகின்றதென்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் இவ்வாறான வழக்குகளை முன்பும் ஒரு தடந்தொடர்தல் இல்லையெனக்கூறித் தள்ளுபடிசெய்திருந்ததால் அந்த நீதிமன்றம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இதுபற்றித் தாம் எந்தவிதக் கருத்தையும் கூறவிரும்பவில்லையென Facebook இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் cookie மீதான சர்ச்சை ஆரம்பித்தலிருந்து இந்நிறுவனம் தாம் எந்தவிதமான தகவல்களையும் பாதுகாத்து வைத்திருக்கவோ பயன்படுத்தவோ இல்லையென்றும் தெரிவித்திருந்தது. ஏனைய தளங்களைப் போலத்தான் தாமும் பயனாளரின் பாதுகாப்பை வழங்குவதற்காக இவற்றைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்திருந்தது.
இந்த இடையீடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது வேண்டுமென்றே தொடர்பாடல்கள் களஞ்சியப்படுத்தப்பட்டதா என்றும் தீர்மானித்து இத்தகைய உள்நுழைதலை Facebook செய்வதைத் தடுக்கவேண்டுமென்று கிரகம் நீதிமனறத்தைக் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment