பாலியல் அறிவூட்டல் இல்லாமையே துஸ்பிரயோகங்கள் அதிகரிக்கக் காரணம். DIG
பாடசாலைகளில் பாலியல் கற்கை நெறிகள், விழிப்புணர்வுகள், பாலியல் தொடர்பான அறிவூட்டல் இல்லாதமையாலேயே சிறுவர்களிடையே பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் தொடர்பான கல்வி அறிவை பாடசாலைகளில் ஆசிரியர்களும், வீடுகளில் பெற்றோர்களும் சிறுவர்களுக்கு எடுத் துரைக்க வேண்டும்.
இவ்வாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீல் தளுவத்த தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு பெண் பொலிஸார் கடமையாற்றி வருகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அந்தப் பொலிஸாரிடம் தமிழிலேயே முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸாரின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சமன்சிகேரா தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment