வெள்ளியில் ஓசோன் படலம் முதல்தடவையாக அவதானிப்பு.
வெள்ளிக் கிரகத்தின் வளிமன்டலத்தில் பூமியில் காணப்படுவதை விட நூறு மடங்கு அடர்த்தி குறைந்த மெல்லிய ஓசோன் படலம் காணப்படுவது ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தின் தொலைநோக்கி மூலம் முதல் தடவையாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பூமி மற்றும் செவ்வாயின் வளிமன்டலம்களில் மட்டுமே ஓசோன் படலம்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பானது ஏனைய கோள்களிலான உயிர் வாழ்க்கை தொடர்பில் தேடுதலில் ஈடுபட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வு பிரான்சிலுள்ள லட்மொஸ் வளிமன்டல ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த பிராங்க் மொன்ட்மெசின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிரகத்தின் ஓசோன் படலமானது அதன் தரைமட்டத்திலிருந்து 100 கிலோமீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பூமியின் ஓசோன் படலம் காணப்படும் உயரத்தைவிட 3 மடங்கு அதிகமாகும் வெள்ளிக்கிரகத்தின் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் சூரிய ஒளியால் பிளவடைந்து ஒட்சிசன் மூலக்கூறாக மாறுகையிலேயே ஓசேர்ன்படல உருவாக்கம் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment