விஐபி பாதுகாப்பு பொலிஸார் சீருடை அணிவது கட்டாயமாகிறது.
பாதாள உலககோஷ்டியையும் பொலிஸாரையும் மக்கள் இனம்காணமுடியும்
விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸார் தமது கடமை நேரங்களில் பொலிஸ் சீருடை அணிந்திருக்க வேண்டியது உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் இவ்விடயத்தில் அனைவரது கண்களும் திறந்துள்ளது எனலாம். இலங்கையில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்தோர் சில அமைச்சர்களின் பிரத்தியேக பாதுகாவலர்களாகவுள்ளனர்.
விஐபி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸார் நெஷனல் வகையான சேட் ஒன்றை அணிவது வழக்கம். இதே வகையான சேட்டுக்களையே இவ்வாறான பாதாளங்களும் அணிந்து கொள்கின்றனர். இதன்போது மக்களுக்கு பொலிஸார் யார் பாதாளம் யார் என்பதை அறிந்து கொள்வது கடினம். இவர்கள் இவ்வுடையில் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல தமது பிறதேவைகளுக்காகவும் இதே உடையுடன் சென்று சாதித்துக்கொள்வதும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் கடந்தகாலங்களில் பதிவாகியிருந்த உண்மைகள்.
இவ்வாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவினை சேர்ந்தோர் என தமிழ் மக்களை பெரும்பாலும் ஏமாற்றுவது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமுள்ள பதாளஉலக கோஷ்டியினராகும். இவர்கள் தம்மை விஐபி பாதுகாப்பு பிரிவினர் என அறிமுகம் செய்து கப்பம் வாங்குதல் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருகின்றோம் என பணம் பெறுதல் போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸம்மிலுடன் வரும் அவரது பாதுகாவலர்களை இங்கே காணலாம். இதில் உத்தியோகபூர்வ பாதுகாவலர் எனவர் என்பதை கண்டறியமுடியாத அளவிற்கு பாதாளங்கள் காணப்படுகின்றனர்.
2 comments :
முஸ்லிம் அமைச்சர்களிடம் மாத்திரம் அல்ல டக்ளஸ் பிள்ளையானிடமும் இவ்வாறான பாதாளக்கும்பல்கள் உள்ளது. இவங்கடபுளுகு சொல்ற இணையங்களைப் போய்பாருங்கோ இதே மாதிரி பல படங்கள் உண்டு
முஸ்லிம் அமைச்சர்களிடம் மாத்திரம் அல்ல டக்ளஸ் பிள்ளையானிடமும் இவ்வாறான பாதாளக்கும்பல்கள் உள்ளது. இவங்கடபுளுகு சொல்ற இணையங்களைப் போய்பாருங்கோ இதே மாதிரி பல படங்கள் உண்டு
Post a Comment